கோலியை கிங்னு இதுக்குதான் சொல்றாங்க.. 15 வருஷத்துல இத செஞ்சு நான் யாரையுமே பாக்கல – ரவி சாஸ்திரி பேட்டி

0
427

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த விராட் கோலியை இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டி பேசி உள்ளார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெர்த் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணி வீரர்களின் அபாரமான பந்து வீச்சினை தாக்குப் பிடிக்க முடியாமல் விரைவிலேயே விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இந்த சூழ்நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் மிகச் சிறப்பாக விளையாட தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் 77 ரன்கள், ஜெய்ஸ்வால் 161 ரன்கள் மற்றும் விராட் கோலி 100 ரன்கள் குவிக்க இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் ஜாம்பவான் வீரரான ரவி சாஸ்திரி கடந்த 15 வருடங்களில் ஒரு வெளிநாட்டு வீரர் ஆஸ்திரேலியாவில் இதுபோன்று விளையாடியது இல்லை என்று விராட் கோலி குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

15 ஆண்டுகளில் இதுபோல ஒரு வீரரை பார்த்ததில்லை

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “கடந்த 15 ஆண்டுகளில் ஒரு வெளிநாட்டு வீரர் ஆஸ்திரேலியாவில் இந்த அளவு ஆதிக்கம் செலுத்தி விளையாடி இருப்பார்களா என்று சந்தேகமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏழு சதங்கள் விராட் கோலி அடித்திருக்கிறார். பெரிய மேடை பெரிய மைதானம், உலகின் பவுன்சி பிட்ச்களில் ஒன்று. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார். இது போன்ற ஒரு சிறப்பான இன்னிங்ஸை யாராவது விளையாடியிருப்பார்களா என்பது சந்தேகமே.

இதையும் படிங்க:ஐபிஎல் மெகா ஏலம் முதல் நாள்.. 10 அணிகளின் கையில் இருக்கும் மீதி பணம்.. மொத்த விபரங்கள்

அதனால்தான் விராட் கோலியை ராஜா என்று அழைக்கிறார்கள். தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியாவுக்காக சதம் அடிப்பது ஒரு நல்ல சூழ்நிலையாகும். அதே போன்று இது ஆஸ்திரேலியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக விளங்குகிறது. ஆனால் இந்த தருணம் மகிழ்ச்சியாக உள்ளது இது ஒரு பிரபலமான சதமாக உள்ளது உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடரை காண வருவார்கள்” என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

- Advertisement -