ஐபிஎல் மெகா ஏலம் முதல் நாள்.. 10 அணிகளின் கையில் இருக்கும் மீதி பணம்.. மொத்த விபரங்கள்

0
725
IPL

இன்று முதல் கட்டமாக நடைபெற்று முடிந்திருக்கும் 2024 ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளிடமும் எவ்வளவு மீதம் பணம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

இந்த மெகா ஏலத்தில் இந்த முறை ஏறக்குறைய எல்லா அணிகளுமே நல்ல முறையில் செயல்பட்டு இருக்கின்றன. வழக்கமாக சுமாராக செயல்படும் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளும் கூட நல்ல முறையில் பொறுப்பாக வீரர்களை வாங்கியிருக்கின்றன. ஒவ்வொரு இடங்களுக்கும் சரியான வீரர்களை நிரப்பி இருக்கின்றன.

- Advertisement -

ஹைதராபாத் மற்றும் பெங்களூரு

தற்போது முதல் கட்டமாக நடந்து தக்க வைத்த வீரர்களுடன் சேர்த்து மொத்தம் 13 வீரர்களை வைத்திருக்கும் ஹைதராபாத் அணியின் கையில் வெறும் 5.15 கோடி ரூபாய் மட்டுமே பணம் இருக்கிறது. பெங்களூரு அணி 9 வீரர்களை வாங்கி கையில் அதிகபட்சமாக 30.65 கோடி ரூபாய் வைத்திருக்கிறது.

மேலும் இந்த ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒட்டுமொத்தமாக 59.20 கோடி ரூபாய் செலவு செய்து அதிகபட்சமாக 14 வீரர்களை வைத்திருக்கிறது. மேலும் தற்போது இந்த அணியின் கையில் 14 வீரர்களை வாங்கியிருந்த போதும் கூட 17.50 கோடி ரூபாய் பணம் இருக்கிறது.

- Advertisement -

அணிகளிடம் இருக்கும் மீதி தொகை

சென்னை சூப்பர் கிங்ஸ் – 12 வீரர்கள் – 15.60 கோடி
டெல்லி கேப்பிட்டல்ஸ் – 13 வீரர்கள் – 13.80 கோடி
குஜராத் டைட்டன்ஸ் – 14 வீரர்கள் – 17.50 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 12 வீரர்கள் – 10.25 கோடி
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் – 12 வீரர்கள் – 14.85 கோடி

மும்பை இந்தியன்ஸ் – 9 வீரர்கள் – 26.10 கோடி
பஞ்சாப் கிங்ஸ் – 12 வீரர்கள் – 22.50 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் – 13 வீரர்கள் – 17.35 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 9 வீரர்கள் – 30.65 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 13 வீரர்கள் – 5. 15 கோடி

இதையும் படிங்க : முதல் டெஸ்ட்.. இந்திய அணிக்கு ஆஸி இப்படி செய்யும்னு.. நினைத்து கூட பார்க்கல – ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து

நாளை வெளிநாட்டு வீரர்களில் ஜோஸ் இங்லீஷ் மற்றும் மார்க்கோ யான்சன் போன்றவர்கள் வர இருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு அணியும் 23 முதல் 25 வீரர்களை மொத்தமாக வாங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு சிஎஸ்கே முழுமையான பிளேயிங் லெவனையே உருவாக்கி விட்டதாக தெரிகிறது!

- Advertisement -