2004ல் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன்.. அப்போது முதல் ஹோட்டலில் ஆர்டர் செய்யும் உணவு இதுதான் – தோனி சுவாரஸ்யம்

0
803

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஆன மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்காக தன்னை தயார் படுத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு தோனி கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த புதிதில் தனக்கு விருப்பமான உணவு குறித்து சில முக்கிய தகவல்களை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி, இவரது தலைமையில் இந்திய அணி அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளை வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி 2007ம் ஆண்டு முதன் முறையாக டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தார். அதற்குப் பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையையும் கைப்பற்றி சாதனை படைத்த தோனி, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாகவும் திகழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் வருகிற மார்ச் மாதம் ஐபிஎல் தொடருக்கு தோனி தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், வர்ணனையாளர் கேட்ட கேள்விகளுக்கு சுவாரசியமான பதில் அளித்த தோனி, அவருக்கு பிடித்தமான உணவு குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தோனிக்கு பிடித்த உணவு

இது குறித்து தோனி கூறும் போது “எனக்கு பிடித்தமான உணவு என்ன என்று கேட்டால் அது எப்போதும் பட்டர் சிக்கன்தான். நான் 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானேன். அதற்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எல்லா இடங்களிலும் விளையாட ஆரம்பித்தேன். ஹோட்டலில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு ஒரு பட்டர் சிக்கன் மற்றும் ஒரு மில்க் ஷேக் ஆர்டர் செய்வேன். பிறகு இரண்டாவது நாளில் அதே ஹோட்டலில் இருந்து உணவில் ஏதேனும் மாற்றம் வேண்டுமா? அதை ஆர்டர் தானே என்று கேட்டார்கள். நான் எந்த மாற்றமும் இல்லை அதையே கொண்டு வாருங்கள் என்று கூறினேன்.

இதையும் படிங்க:அவங்க இல்லனா.. இந்திய அணிகிட்ட மோசமா தோத்துருப்போம்.. ஜெயிக்க கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணோம் – வங்கதேச கேப்டன்

எனக்கு பட்டர் சிக்கன் தான் மிகவும் பிடித்தமான உணவு இதனை நான் பல இடங்களில் கூறியிருக்கிறேன்” என்று பதிலளித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களம் இறங்க உள்ள தோனி இது அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரசிகர்கள் அவரைக் காண மைதானம் முழுவதும் நிரம்பி இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -