சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேச அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெற்று விட்டது.
இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய அணி வெற்றி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே 5 விக்கெட்டுகளை 35 ரன் களுக்குள் இழந்து தடுமாறியது. அந்த சமயத்தில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஹரிதாய் மற்றும் ஜேக்கர் அலி ஆகியோர் சிறப்பாக விளையாடி வங்கதேச அணி ஓரளவு நல்ல ரன்கள் பெற உதவினார்கள். இதில் வங்கதேச அணிக்கு சிறப்பாக விளையாடிய மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஹரிதாய் 100 ரன்கள் குவித்து தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு துணை கேப்டன் சுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 129 பந்துகள் எதிர்கொண்டு 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ் என 101 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். இந்த சூழ்நிலையில் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் இந்தப் போட்டியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக பேசி இருக்கிறார்.
தோல்வி அடைய இதான் காரணம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பவர் பிளே முடிவதற்குள் நாங்கள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது எங்களது தோல்விக்கு மிக முக்கிய பங்காற்றியது. ஹரிதாய் மற்றும் ஜேக்கர் அலி ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் நாங்கள் மைதானத்தில் தொடர்ந்து தவறுகளை செய்தோம். கேட்சுகள் தவறவிட்டோம் ரன் அவுட்டுகள் தவறவிட்டோம். இதனை சரியாக செய்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும்.
இதையும் படிங்க:நான் அழுத்தத்தில் இருந்தப்போ.. அவர்தான் உதவி செஞ்சாரு.. சதம் அடிக்க அதான் காரணம் – கில் பேட்டி
ஹரிதாய் மற்றும் ஜேக்கர் அலி ஆகியோர் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அற்புதமாக பேட்டிங் செய்தார்கள். எனவே வரும் போட்டிகளிலும் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று தோன்றுகிறது. மேலும் புதிய பந்தில் விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தால் எங்கள் அணிக்கு முடிவுகள் வேறு மாதிரி கிடைத்திருக்கும். நாங்கள் சமீபத்தில் பாகிஸ்தான் அணியோடு விளையாடி உள்ளோம். அடுத்த போட்டி ராவல் பிண்டியில் நடைபெற உள்ளதால் அதற்குத் தகுந்தவாறு எங்கள் வீரர்கள் மாற்றிக் கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.