10 மாதம் கிரிக்கெட் ஆட விட்டு.. இப்போ இல்லாதவரை பத்தி ஏன் பேசுறீங்க.. முன்னாள் இந்திய கேப்டன் காட்டமான கருத்து

0
802

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரை வெற்றிகரமாக விளையாடி முடித்த பிறகு அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இந்திய வீரர்களின் போட்டி அட்டவணைகள் மற்றும் ஏற்படும் காயங்கள் என சில விஷயங்களை நுணுக்கமாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

வீரர்களின் போட்டி அட்டவனை

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் கடந்த ஆண்டு வருடத்திற்கு 10 மாதங்கள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு உருவாகிறது. மேலும் உள்நாடு வெளிநாடு என அனைத்து இடங்களிலும் இந்திய அணி விளையாடுவதற்கான அட்டவணைகள் ஒரு வருடத்திற்கு முழுமையாக இருக்கின்றன.

போதிய ஓய்வில்லாமல் தொடர்ச்சியான போட்டிகள் விளையாடி வருவதால் வீரர்களுக்கு காயங்கள் ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகிறது. ஆஸ்திரேலிய தொடரில் பும்ரா காயம் அடைந்து வெளியேறியதால் தற்போது நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். இது அணிக்குப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கபில் தேவ் இது குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இல்லாதவர் பற்றி ஏன் பேச வேண்டும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எனக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்திய வீரர்கள் வருடத்திற்கு 10 மாதங்கள் விளையாடுகிறார்கள். அதனால் காயம் என்பது பொதுவான விஷயமாக இருக்கும். மேலும் பும்ரா காயம் அடைந்தது பற்றி பேசுகிறீர்கள், அணியில் இல்லாத ஒருவரை ஏன் பேச வேண்டும்? இது ஒரு குழு விளையாட்டு அணி வெற்றி பெற வேண்டுமே தவிர தனிநபர் அல்ல. இது பேட்மிண்டன், டென்னிஸ் அல்லது கோல்ப் கிடையாது. இது குழுவாக விளையாடும் ஒரு கிரிக்கெட் போட்டியாகும்.

இதையும் படிங்க:12 ரன்.. 12 சிக்ஸ்.. ரோஹித் சர்மா படைக்கப் போகும் வரலாற்று 2 சாதனைகள்.. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

உங்கள் அணியில் முக்கிய வீரர் காயம் அடையும்போது எதுவும் செய்ய முடியாது. எனவே இப்போதைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் மட்டுமே சொல்ல வேண்டும். இளைஞர்களை பார்க்கும்போது அவர்களின் தன்னம்பிக்கை நம்ப முடியாத வகையில் இருக்கிறது. நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது இந்தளவுக்கு எங்களுக்கு தன்னம்பிக்கை கிடையாது. எனவே அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -