நான் அடுத்த கேப்டனா பார்த்தது இவரைத்தான்.. கிரவுண்ட்ல ஒரு கேப்டனாவே இருந்தாரு – இந்திய முன்னாள் பவுலிங் கோச் பேட்டி

0
88
Mhambrey

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்த பொழுது பந்துவீச்சு பயிற்சியாளராக பராஸ் மஹாம்ப்ரே இருந்தார். தற்போது இந்திய அணியில் பொறுப்பில் இருந்து விலகிய அவர் பல விஷயங்களுக்கு வைத்து மனம் திறந்து பேசி வருகிறார். இதில் இந்திய அணியில் களத்தில் தான் கேப்டனாக பார்த்த வீரர் யார்? என்பது குறித்து கூறியிருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பொழுது பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளராக பராஸ் மஹாம்ப்ரே, பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி.திலக் ஆகியோர் கொண்டுவரப்பட்டார்கள். தற்பொழுது இதில் டி.திலக் மட்டுமே நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியில் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா உடன் தனக்கு இருந்த உறவு எப்படியானது? எதிர்கால இந்திய வேகப்பந்து வீச்சு துறை எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது? தன்னுடைய அடுத்த கட்ட பயணம் எப்படி ஆனது என்பது குறித்து அவர் நிறைய பேசியிருக்கிறார். இதில் அவர் களத்தில் வீரர்கள் செயல்பாடு பற்றியும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “பும்ரா தன் திறமையின் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார். அவருக்கு அது குறித்து எப்பொழுதும் சந்தேகங்கள் ஏற்பட்டதே கிடையாது. நீங்கள் மைதானத்தில் அவரை பார்க்கும் பொழுது அதுதான் பிரதிபலிக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய தலைமை குணம்தான். அவர் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தலைமை பாத்திரத்திற்கான ஒரு நபர்.

- Advertisement -

பும்ரா போன்ற ஒருவர் உங்களுக்கு அணியில் மிகக் கட்டாயமாகத் தேவை. நிறைய அனுபவம் உள்ள அவர் அனுபவம் இல்லாத மற்ற இளம் வீரர்களுக்கும் அணியில் அதை பகிர்ந்து கொள்கிறார். பும்ராவை பார்க்கும்போதெல்லாம் நான் மைதானத்தில் ஒரு கேப்டனாகவே பார்த்தேன்.

அவர் ஒரு தலைமுறையின் பந்துவீச்சாளர். டி20 கிரிக்கெட் என்று மட்டும் கிடையாது ஒட்டுமொத்தமாக மூன்று கிரிக்கெட் வடிவத்திலும் மிகத் திறமையானவர். தற்பொழுது அவர்தான் முதல் இடத்திலும் இருக்கிறார். அதே சமயத்தில் அவர் எவ்வளவு திறமையானவராக இருக்கிறாரோ அதை களத்தில் தவறாமல் செயல்படுத்துகிறார். பத்துக்கு ஒன்பது முறை அவரால் நினைத்த பந்தை பேச முடியும் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய சிறப்பு.

இதையும் படிங்க : ஹர்திக்கை கேப்டன் ஆக்காதது ஆச்சரியமா இல்ல.. எனக்கு இதுதான் ஆச்சரியமா இருக்கு – ஆஷிஷ் நெஹ்ரா

மேலும் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எதற்கும் கிரடிட் எடுக்க மாட்டார். வீரர்கள் மற்றும் கேப்டனையே முன்னால் நிறுத்துவார். அவருடன் எனக்கு தொழில் ரீதியாக கடந்த 9 வருடங்களாக உறவு இருக்கிறது. அவர் ஒரு லெஜன்ட். ரோஹித் சர்மாவுடனும் நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் பணி செய்து இருக்கிறேன். அவர் அணியில் எல்லாவிதமான விஷயங்களிலும் கலந்து கொள்வார். சாதாரண உரையாடல்களை கூட அவர் விட்டுவிடாமல் பங்கேற்பார். அவருடைய உழைப்பு அற்புதமானது. மேலும் சில ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணியில் நான் இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -