இந்தியா உட்பட எட்டு அணிகள் பங்கு பெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான இந்திய அணி கடத்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணி குறித்து முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் அதுல்வாசன் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக ஆசிய கோப்பை டி20 தொடர் வடிவில் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த தொடரில் இடம்பெறும் இந்திய அணி வீரர்களே பெரும்பாலும் உலகக் கோப்பை தொடரில் இடம் பிடிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்துவரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆசிய கோப்பை அணியில் இடம்பெறவில்லை என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஜெய்ஸ்வால் இடம் பெறாதது ஏன் என்பது குறித்தும், அதே போல ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாமல் போனதற்கான காரணத்தையும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாசன் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஜெய்ஸ்வால் இன்னும் அதிகமாக வருத்தப்பட வேண்டும். ஏனென்றால் இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அவர் மூன்றாவது வரிசை ஆட்டக்காரர். ஸ்ரேயாஸ் ஐயரை விட ஜெய்ஸ்வால் ஏன் இந்த அணியில் இல்லை என்பதை நாம் விவாதிக்க வேண்டும். ரோஹித் சர்மா வெளியேறிவிட்டார் விராட் கோலி வெளியேறிவிட்டார். ஆனால் அணியில் இன்னும் ஜெய்ஸ்வால் கிடையாது. அவர் மீது எந்த தவறும் இல்லை.
இதையும் படிங்க:இந்தியா, பாகிஸ்தான் இருத்தரப்பு போட்டிக்கு தடை.. ஆசிய கோப்பையில் இரு அணிகளும் மோதுமா? மத்திய அரசு விளக்கம்
இதுதான் இந்திய கிரிக்கெட் அணியில் கிரிக்கெட்டும் தேர்வுகளும். நிறைய யூகங்கள் உள்ளன. ஆனால் நான் இதை அரசியல் என்று சொல்ல மாட்டேன். ஆனால் நிச்சயமாக தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உள்ளது. ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயர் கம்பீர் கூட்டணி ஐபிஎல் கோப்பையை வென்றது, அதற்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு வந்து பல மாயாஜாலங்களை செய்தார். அதனால் அங்கே ஏதோ ஒரு மோசமான உறவு இருக்கிறது என்று நினைக்கிறேன். இருப்பினும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இடம் பிடித்த திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






