இலங்கை அணிக்கு எதிரான இரண்டு தொடர்களுக்கான இந்திய அணியும் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனையில் அவர் கேப்டன் பொறுப்புக்கு சரிவருவாரா எதிர்காலத்தில் அவரால் இதை சமாளிக்க முடியுமா? என இந்திய முன்னாள் பேட்டிங் கோச் விக்ரம், ரத்தோர் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்ற காரணத்தினால் சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஆக்கப்பட்டார். மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக இந்திய அணிக்கு சென்றார்.
இந்த நிலையில் இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் சுப்மன் கில் கேப்டன் பொறுப்பு பற்றி கூறும்பொழுது “குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக கில் நன்றாகவே செயல்பட்டு இருந்தார். அவர் அற்புதமான உடல் மொழியை வெளிப்படுத்தினார். நீங்கள் ஒரு அணியை வழிநடத்தினால் இப்படி இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். தற்பொழுது பிசிசிஐ அவருக்கு துணை கேப்டன் பொறுப்பை வழங்கியிருக்கிறது. அவர் இதிலும் சிறப்பாக வருவார் என்று நம்புகிறேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தனக்கு மூன்றாவது இடம் சிறந்தது என்று நினைத்தார். அவர் இது குறித்து தெரிவித்த பொழுது அவரை அணி நிர்வாகம் முழுமையாக ஆதரித்தது. நான் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்தோம். அவர் மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.
நான் முதல் முதலில் கில்லை வலைப்பயிற்சியில் பார்த்தபோது, அவரைப் பற்றி பலரும் சொல்வது போல அவருடைய சிறப்புத் திறமையை பார்த்தேன். அவர் விளையாடுவதை பார்த்தபோது ‘அட இந்தப் பையன் மிகவும் திறமையானவன்’ என்று நினைத்தேன்.
கேப்டன் பொறுப்பு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிடமிருந்து சிறந்ததை கொண்டு வந்தது என்று நான் நினைக்கிறேன். இதே போல கேப்டன் பொறுப்பு சுப்மன் கில் இடம் இருந்து சிறந்ததை கொண்டுவரும் என்று நான் உறுதியாக சொல்கிறேன். மேலும் தற்போது அவர் கேப்டனாக இல்லாவிட்டாலும் கூட, தலைமை குழுவில் இருக்கின்ற காரணத்தினால் இதுவே அவர் சிறந்ததை வெளியில் கொண்டு வரும்.
இதையும் படிங்க : விராட் பாய் முன்னுதாரணம்தான்.. ஆனா ரோகித் பாய் கிட்டதான் இதை கத்துக்கிட்டேன் – அர்ஷ்தீப் சிங் பேச்சு
நீங்கள் கேப்டன் பொறுமப்பில் இருக்கும் பொழுது மற்றவர்களை வழி நடத்துகிறீர்கள் இது உங்களுக்கு கூடுதல் பொறுப்பை கொண்டு வருகிறது. இது கில் மாதிரியான இளைஞருக்கு மிகவும் நல்ல ஒரு விஷயம். கில் ஒருநாள் மூன்று வடிவங்களிலும் இந்தியா அணியை கேப்டனாக வழிநடத்தும் சூழ்நிலையும் வரும்” என்று கூறியிருக்கிறார்.