பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் இதில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரீந்தர் கண்ணா சீனியர் வீரர்களின் பீல்டிங் குறித்து சில விமர்சனங்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சீனியர் வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் மிகச் சிறப்பான வீரர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களது சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா மீண்டும் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுக்க மும்பையில் உள்ள பயிற்சி அகாடமியில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் பேட்டிங்கில் நன்றாக செயல்படும் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கில் இரண்டு அடிகள் பின்னோக்கி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அவரது உடல் அமைப்பு முன்பை விட சற்று பெரிதாக இருக்கும் நிலையில் அவரால் வேகமாக பந்தை பிடித்து வீச முடியாத நிலையில் கொஞ்சம் இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரீந்தர் கண்ணா விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் பீல்டிங் குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங்கில் மிக பலவீனமாக இருக்கிறார். அவர் எல்லைக்கோட்டின் அருகே பீல்டிங் செய்தால் எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் இரண்டு ரன்கள் எளிதாக எடுக்க முடியும். விராட் கோலியை பொறுத்தவரை ஃபீல்டிங்கில் ஸ்லிப் பகுதிகளில் மட்டுமே அதிகமாக நிற்கிறார்.
இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டி.. முகமது சமியை நான் எடுக்கவே மாட்டேன்.. அதுக்கு இதான் காரணம் – சஞ்சய் பாங்கர்
மேலும் உள் வட்டத்திற்கு உள்ளே மட்டுமே அதிக அளவில் பீல்டிங் செய்கிறார். விராட் கோலி பீல்டிங்கை பொறுத்தவரை பெரிய அளவில் ஸ்கோர் செய்யாமல் இருக்கிறார். எல்லைக்கோட்டில் இல்லாமல் வட்டத்திற்கு உள்ளே மட்டும் அதிக அளவில் முயற்சி செய்கிறார். எனவே இவர்கள் இருவரும் மனதளவில் ஃபிட்டாகி மீண்டும் தங்களது பழைய பார்முக்கு வருவார்கள் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே கூடிய விரைவில் இவர்கள் இருவரும் தங்களது சிறந்த பார்முக்கு வருவார்கள்” என்று கூறியிருக்கிறார்.