சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டி.. முகமது சமியை நான் எடுக்கவே மாட்டேன்.. அதுக்கு இதான் காரணம் – சஞ்சய் பாங்கர்

0
405

அடுத்த மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் அஜித் அகர்கர் ஆகியோரால் அறிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் முகமது சமி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்து கொள்ள உள்ள எட்டு அணிகளும் தங்களது அணிகளை அறிவித்த நிலையில் இந்திய அணியும் நேற்று 15 பேர் கொண்ட குழுவை அறிவித்தது. ரோஹித் சர்மா கேப்டன் மற்றும் சுப்மான் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட இந்த அணியில் கடந்த ஒரு நாள் உலக கோப்பை தொடருக்கு பிறகு காயம் அடைந்த முகமது சமி இந்த தொடர் மூலமாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய அணி வருகிற 19 ஆம் தேதி வங்கதேச அணியோடு முதல் போட்டியை எதிர்கொள்ள உள்ளது. இதில் இந்திய அணி கட்டாயமாக வெற்றிபெறும் உழைப்பில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமியை தேர்வு செய்ய மாட்டேன் எனக் கூறி அதற்கான காரணத்தை விளக்கி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியில் முகமது ஷமி

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “நீங்கள் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை நீக்குகிறீர்கள். அதில் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகிய இருவரும் இருந்தால் அதில் முகமது ஷமியை நான் நீக்குவேன். எனவே எனக்கு முகமது சமி இந்திய அணியின் பந்துவீச்சை தொடங்கும் முதன்மை பந்துவீச்சாளராக எனக்கு இருக்க மாட்டார். அதற்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷார் பட்டேல் ஆகியோரோடு கேஎல் ராகுலை நான் தேர்வு செய்வேன்.

இதையும் படிங்க:வெறும் வாய் வார்த்தையா.? உங்க ரூல்ஸை நீங்களே மீறலாமா.. இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் பேட்டி

மேலும் இந்த அணியில் ரிஷப் பண்ட் இருக்க மாட்டார். எனவே எனது அணியாக ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இருப்பார்கள் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -