இந்திய கிரிக்கெட்

4வது டெஸ்ட்.. இனி அவருக்கு வாய்ப்பு தருவது வேஸ்ட்.. தயவு செஞ்சு அந்த பையனை கொண்டு வாங்க – இந்திய முன்னாள் வீரர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய அணி இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தீப் தாஸ் குப்தா நான்காவது டெஸ்ட் போட்டிக்கான மாற்றங்கள் குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. இருப்பினும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்த இந்திய அணி மோசமான பேட்டிங் காரணமாக 22 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. எனவே வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள நான்காவது போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் கடந்த மூன்று போட்டிகளாக வாய்ப்பு பெற்ற கருண் நாயர் பேட்டிங்கில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்து இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை அவர் பெரிதாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தாஸ் குப்தா சாய் சுதர்சனை திரும்பவும் நான்காவது டெஸ்ட் போட்டியில் கருண் நாயருக்கு பதிலாக விளையாட வைக்க வேண்டும் என சில காரணங்கள் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “அடுத்து விளையாட போகும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது. அப்படி ஒரு மாற்றம் இருந்தால் அது கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் உள்ளே வருவார். கருண் நாயர் பெரிய ரன்கள் எடுக்காதது போல் இல்லை. அவருக்கு அருமையான தொடக்கங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவர் அதை பெரிதாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளாக அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறார். ஆனால் அவர் நம்பிக்கைகுரிய வீரராக இல்லை.

இதையும் படிங்க:ஜடேஜா போராடினாரு.. ஆனா இந்த வாய்ப்பை அவர் மிஸ் பண்ணாம இருந்திருந்தா இந்தியா கண்டிப்பா ஜெயிச்சிருக்கும் – சுனில் கவாஸ்கர்

இரண்டாவதாக சாய் சுதர்சனுக்கு வயது குறைவு தான். இதனால் அவர் இங்கிலாந்தில் அதிக நம்பிக்கை பெறுவார். எதிர்காலத்திற்காக ஒரு இளம் வீரர் மேல் அதிக முதலீடு செய்வது நல்லது. நீங்கள் முதலீடு செய்ய வேண்டியது இருந்தால் சாய் சுதர்சன் போன்ற ஒரு வீரருக்கு முதலீடு செய்யலாம். அதை இப்போதே ஆரம்பியுங்கள் இல்லையென்றால் நீங்கள் இதற்கு அடுத்து எப்போது இங்கிலாந்தில் விளையாடுவீர்கள் என்று தெரியாது. எனவே மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்கு சாய் சுதர்சன் மீது முதலீடு செய்யுங்கள்” என அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by