இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ள நிலையில், இந்த இரண்டு தொடர்களுக்குமான அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் இரண்டு முக்கிய வீரர்கள் இடம் பெறாதது குறித்து அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் மற்றும் லோக்சபா எம்பி ஆன சசிதரூர் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.
2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்திய அணி மொத்தம் ஆறு ஒரு நாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்க உள்ளது. இதனால் அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு திரும்பி இருக்கின்றனர். நேற்று இலங்கை அணிக்கு எதிரான விளையாட போகும் இந்திய அணியை அறிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஆச்சரியம் அளிக்கும் விதமாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்கவில்லை.
இத்தனைக்கும் சஞ்சு சாம்சன் இதற்கு முன்னர் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் விளாசி தனது திறமையை நிரூபித்து இருந்தார். அதேபோல இலங்கை அணிக்கு எதிராக மோத உள்ள டி20 அணியும் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அபிஷேக் ஷர்மாவையும் இந்திய அணியில் சேர்க்கவில்லை. அபிஷேக் ஷர்மாவும் கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 46 பந்துகளில் சதம் விளாசி இருந்தார்.
இது கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான வாஷிம் ஜாஃபர் எப்போதுமே நகைச்சுவையான கருத்துக்களை வெளியிடுவதில் கவனம் பெறுவார். இவர்கள் இருவரும் இடம்பெறாததை குறிக்கும் விதமாக சஞ்சய் தத் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரது புகைப்படங்களை வெளியிட்டு “சொல்வதற்கு ஆச்சரியமாக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதாவது சஞ்சு சாம்சனுக்கு பதிலாக சஞ்சய் தத் புகைப்படத்தையும், அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக அபிஷேக் பச்சன் புகைப்படங்களையும் வெளியிட்டு கவனத்தை ஈர்த்தார். அதேபோல லோக்சபா எம்பி ஆன சசிதரூர் இந்த இருவரும் நீக்கப்பட்டது குறித்து ஆச்சரியம் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:கில் ரன் தேத்திக்கிற ஆளு.. டீம்ல சேர்க்கவே கூடாது.. ருதுராஜ்தான் கரெக்ட் – ஸ்ரீகாந்த் விமர்சனம்
சமூக வலைதளமான எக்ஸ்தலத்தில் தனது கருத்தை பதிவிட்ட சசி தரூர் “இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்தியாவின் அணித்தேர்வு சுவாரசியமாக அமைந்திருக்கிறது. தனது கடைசி போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சதம் விளாசிய அபிஷேக் ஷர்மாவும் இதில் தேர்வு செய்யப்படவில்லை. எனினும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறி இருக்கிறார்.
Surprised to say the least. #SLvIND pic.twitter.com/rjpDpxhN4S
— Wasim Jaffer (@WasimJaffer14) July 19, 2024






