கில் ரன் தேத்திக்கிற ஆளு.. டீம்ல சேர்க்கவே கூடாது.. ருதுராஜ்தான் கரெக்ட் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
313
Gill

நேற்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கு இரண்டு இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு இந்திய அணிகளிலுமே ருதுராஜிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டனும் முன்னாள் தேர்வு குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டு தொடர்களிலும் ருதுராஜ் பெயர் இல்லாத நிலையில், இரண்டு அணிகளுக்குமே துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது விமர்சனங்களை இன்னும் அதிகமாக கூடிய வகையில் அமைந்திருக்கிறது.

- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் போட்டிகள், ரன்கள், ஆவரேஜ் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் என எல்லாவற்றிலும் கில்லை விட ருதுராஜ் மேலே இருக்கிறார். மேலும் கில்லுக்கு முன்பாகவே ரோஹித் சர்மாவுக்கு மாற்றுத் துவக்க ஆட்டக்காரராக ருதுராஜ் கொண்டுவரப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வந்தார்.

இப்படியான நிலையில் திடீரென டி20 உலகக்கோப்பையில் இருந்து ருதுராஜ் புறக்கணிக்கப்படுகிறார். அதற்கு முன்பாக மிகச் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சதம் அடித்திருந்தார். மேலும் ஜெயஸ்வாலுடன் இணைந்து அருமையான தொடக்கங்களை கொடுத்திருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து பேசி இருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் “சுப்மன் கில்லுக்கு இந்திய டி20 அணியில் இடமே கிடையாது. எந்தக் கேள்வியும் இல்லாமல் ருதுராஜ்தான் நேரடியாக இடம் பெற வேண்டும். ஜிம்பாப்வே தொடரில் ஒரு பக்கம் அபிஷேக் ஷர்மாவும் இன்னொரு பக்கம் ஜெய்ஸ்வாலும் அதிரடியாக ரன்கள் அடிக்க, அவர்களை வைத்து சுப்மன் கில் தனக்கு மெதுவாக ரன்களை தேத்திக் கொண்டு இருந்தார்.

இதையும் படிங்க : சூரியகுமார் இந்த 3 பேர்கிட்ட நிறைய கத்துக்கிட்டார்.. நான் அனுப்பின மெசேஜ் படியே நடந்தது – இளம் வயது பயிற்சியாளர் பேட்டி

சுப்மன் கில்லுக்கு நல்ல ராசி இருக்கிறது போல. ருதுராஜ் போன்ற ஆட்கள் கடுமையாக உழைத்துதான் மேலே வரவேண்டிய தேவை இருக்கிறது. இதை என்னால் வெளிப்படையாக பேச முடியும். உங்களால் இப்படி எல்லாம் இதை வெளிப்படையாக சொல்லி விட முடியாது” என்று மிகக் கடுமையாகவே விமர்சித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -