அகர்கர் இப்படி செஞ்சா நியாயமா?.. அதிகாரம் வந்தா என்ன வேணா பண்ணுவிங்களா – பாக் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த சேவாக்

0
61
Sehwag

நடப்பு டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் ஓய்வு அறிவித்திருந்த இமாத் வாசிம் மற்றும் முகமது அமீர் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் உடல் தகுதி இல்லாத அசாம் கானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சேவாக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் எதிர்கால பாகிஸ்தான் அணியை உருவாக்குவதற்கு பதிலாக, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வியின் மீதான விமர்சனத்தை குறைப்பதற்கு, டி20 உலக கோப்பைக்கு தற்காலிக தீர்வுகாண ஒரு அணியை தேர்வு செய்து தப்பாகச் சென்று இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக வந்த வகாப் ரியாஸ் ஒரு தலைப்பட்சமாக தேர்வில் நடந்து தவறு செய்து விட்டதாக இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் குற்றம் சாட்டி இருக்கிறார். இதன் காரணமாகவே பாகிஸ்தான் முதல் சுற்று உடன் வெளியேறியது எனவும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது ரியாஸ் மற்றும் முகமது அமீர் இருவரும் ஒரே தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு பாகிஸ்தான் அணியை பற்றி விமர்சனம் செய்து கொண்டு இருந்தார்கள். இன்று அவர்களில் ஒருவரான வகாப் ரியாஸ் தேர்வுக்குழு தலைவர் ஆனார். இன்னொருவர் முகமது அமீர் பாகிஸ்தான் விளையாடும் அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணியை விமர்சித்த அதே நபர்கள் இன்று அதிகாரம் வந்ததும் என்ன செய்தார்கள்? உடனே தன்னுடைய நபர் அணியில் இருக்க வேண்டும் என முகமது அமீரை தேர்வு செய்தார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் அகர்கர் என்னையும் ஜாகீர் கானையும் திரும்ப இந்திய அணிக்கு தேர்வு செய்தது போல இருக்கிறது. உங்களுக்கு இந்திய அணியில் நான் இடம் தருகிறேன் என்று செய்தது போல இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி வரலாறும் தெரியும் இப்ப நிலைமையும் தெரியும்.. இப்படித்தான் பிளான் பண்ணி இருக்கோம் – ஆப்கான் கோச் பேட்டி

நீங்கள் தேர்வாளராகிவிட்டீர்கள் எனவே பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் எதிர்காலத்தை பற்றி பார்க்க வேண்டும். உங்களுக்கு ஒருவேளை கொடுக்கப்பட்டு இருக்கிறது, அந்த வேலையைச் சரியாகச் செய்யுங்கள். அங்கு உட்கார்ந்து கொண்டு யாருக்கும் உதவி செய்யாதீர்கள். தேர்வாளர்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.