கோலி வரலாறும் தெரியும் இப்ப நிலைமையும் தெரியும்.. இப்படித்தான் பிளான் பண்ணி இருக்கோம் – ஆப்கான் கோச் பேட்டி

0
76
Virat

ஆசியக் கண்டத்தில் இருந்து இளம் கிரிக்கெட் அணியாக ஆப்கானிஸ்தான் மிகச் சிறப்பான செயல்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலிக்கு எதிரான திட்டங்கள் எப்படியானது என ஆப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜோனதன் டிராட் பேசியிருக்கிறார்.

இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் ஆப்கானிஸ்தான் அணியின் அமைப்பிற்கு மிகவும் சரியானதாக இருந்தது. இதே போல வெஸ்ட் இன்டீஸ் சூழ்நிலைகளும் ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகவும் சரியானதாக இருக்கிறது.

- Advertisement -

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வந்திருக்கிறது. தங்கள் பிரிவில் இருந்த ஆபத்தான அணியான நியூசிலாந்து அணியை வெளியேற்றியும் இருக்கிறது.

இன்று இந்தியாவுக்கு எதிராக சூப்பர் எட்டு சுற்று மோத இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோனதன் டிராட் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்டார். அதில் ஒரு பத்திரிக்கையாளர் விராட் விராட் கோலிக்கு எதிராகத் திட்டங்களை எப்படி உருவாக்கும் என விரிவான கேள்வி ஒன்றைக் கேட்டார். அதற்கு டிராட் மிக விளக்கமான பதில் கொடுத்திருக்கிறார்.

பத்திரிகையாளர் தன்னுடைய கேள்வியில் “விராட் கோலி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ரன்கள் எடுக்கவில்லை என்பது, ஒரு எதிரணியாக உங்களுடைய திட்டமிடலை எளிதாக்குகிறதா? சிறந்த பேட்ஸ்மேனாக அவர் கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்பதைப் பார்ப்பீர்களா?அவரின் தற்போதைய பார்ம் மற்றும் ரன்கள் எடுக்கவில்லை என்பது உங்களுடைய திட்டமிடலில் ஏதாவது வித்தியாசத்தை உண்டாக்குமா?” என்று கேட்டிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : தாங்களே சமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி.. செயின்ட் லூசியாவில் என்ன நடக்கிறது?

இதற்கு பதில் அளித்த ஜோனதன் டிராட்
“நாங்கள் எப்பொழுதும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி இரண்டு இன்னிங்ஸ்களை பார்க்கிறோம். அவை எப்படி இருக்கின்றன என்பதை வைத்து திட்டத்தில் ஏதாவது செய்ய வேண்டுமா? என்று பார்க்கிறோம். மேலும் ஒரு வீரரின் திறமையையும் பார்க்கிறோம். வெளிப்படையாகவே நாங்கள் திட்டமிடும் வீரரின் கடந்த கால வரலாற்றையும் எடுத்துக் கொள்கிறோம். ஒரு வீரர் பார்மில் இல்லையென்றால், அவருடைய பலவீனத்தை கண்டறியலாம் இல்லை நாம் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். விராட் கோலிக்கு இப்படித்தான் தயாராகி இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.