இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த போது வாஷிங்டன் சுந்தர் மற்றும் நித்திஷ் ரெட்டி அணியை காப்பாற்றினார்கள்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் வாஷிங்டன் சுந்தர் விளையாடும் விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதன் நான்காவது போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி அதற்குப் பிறகு இக்கட்டான நிலையில் சிக்கியது.
221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் நித்திஷ் ரெட்டி கூட்டணி 127 ரன்கள் குவித்து இந்திய அணியை நல்ல நிலையில் வைத்தது. இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்திருக்கும் நிலையில் இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து மீண்டும் தனது திறமையை நிரூபித்திருக்கும் நிலையில் இவர் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுலேர் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்தப் பையனைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “வாஷிங்டன் சுந்தரிடமிருந்து ஆஸ்திரேலியாவில் இதற்கு முன்னர் நடைபெற்ற தொடரில் அவரை பார்த்து இருக்கிறோம். எனவே அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. அதனால்தான் அவர் இந்த போட்டியில் விளையாடுகிறார். ஏனென்றால் அவரது பேட்டிங் இந்திய அணிக்கு நன்றாக உதவும். அவர் மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து சற்று வித்தியாசமானவர். அவர் பின் காலை பயன்படுத்தி ஆடுகளத்தில் விளையாடும் போது அவர் ஹிட் விக்கெட் ஆக வாய்ப்பிருப்பதாக எனக்கு இரண்டு முறை தோன்றியது.
இதையும் படிங்க:கொஞ்சம் அமைதியா இருங்க.. ரிஷப் பண்ட் அப்படிப்பட்ட ஆள் இல்லை.. இதை பார்த்தா புரியும் – ரவி சாஸ்திரி ஆதரவு
ஆனால் அவர் அதை மிகவும் தாமதமாக விளையாடி சிறப்பாக செயல்படுத்துகிறார். ஒரு பையனுக்கு எப்படி இவ்வளவு திறமை இருக்க முடியும் என்று என்னை ஆச்சரியப்படுத்துகிறார் மேலும் வாஷிங்டன் சுந்தர் ஒரு ஆஃப் ஸ்பின்னர். உள்நாட்டுத் தொடரில் அவர் அஸ்வினுக்கு சரியான மாற்றுவீராக களமிறங்கி நன்றாக பேட்டிங் செய்வதை பார்த்தோம். மேலும் அவர் டி20 மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டையும் விளையாடுகிறார்” என்று கூறி இருக்கிறார்.






