இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிற நிலையில் ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்த விதம் குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடி இருந்தார்.
இந்த சூழ்நிலையில் முன்னாள் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி ரிஷப் பண்டுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சனம் செய்த சுனில் கவாஸ்கர்
இந்திய அணி முக்கியமாக ஜெயித்தாக வேண்டிய நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய நிலையில் 159 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இந்திய அணி இழந்தது. பொறுப்பாக நின்று ஆட்டத்தை எடுத்துச் செல்லாமல் தேவையில்லாத ஷாட் விளையாடி ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆட்டம் இழந்த போது கடுமையான விமர்சனம் செய்திருந்தார்.
ஒரு முட்டாள்தனமான ஷாட் இது, அவர் தனது விக்கெட்டை தேவையில்லாமல் தூக்கி எறிகிறார். அவர் இந்திய அணிக்காக நிலைத்து நின்று விளையாடி இருக்க வேண்டும் என்று சில கருத்துக்களை பேசியிருந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சி யாளராக திகழ்ந்த ரவி சாஸ்திரி ரிஷப் பண்ட் இதற்கு முன்பு இது போன்ற ஷாட் விளையாடி அவுட் ஆனதில்லை எனவே பொறுமையாக இருக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.
ரவி சாஸ்திரி ஆதரவு
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறும் பொழுது “ஒவ்வொரு இன்னிங்சிலும் ரிஷப் பண்ட் இதுபோன்று ஆட்டம் இழந்ததில்லை. அவர் ஆட்டம் இழந்த விதம் குறித்துப் பார்ப்போம். அவர் இரண்டு மூன்று நல்ல பந்துகளிலேயே ஆட்டம் இழந்து இருக்கிறார். அடிலெய்டில் ஒரு நல்ல லென்த் ஆப் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது அவர் தாக்குதல் ஆட்டத்தை தொடர வழி இல்லை. அதேபோல அதே மைதானத்தில் இரண்டாவது இன்னிங்சில் ஸ்டார்ககிடம் இருந்து ஒரு நல்ல பந்தை எதிர்கொண்டு வெளியேறினார். எனவே நண்பர்களாகிய நாம் அமைதியாக இருப்போம்.
இதையும் படிங்க:என்னை அப்பவே கவர்ந்திட்ட.. உன் ஆட்டம் கண் கலங்க வச்சிடுச்சு – சச்சின் ரவி சாஸ்திரி நிதிஷ்குமாருக்கு வாழ்த்து
ரிஷப் பண்ட் எல்லா நேரங்களிலும் இதுபோல தனது விக்கெட்டை தூக்கி எறிவது இல்லை. அவர் விளையாடத் தவறிய நல்ல பந்துகளிலேயே ஆட்டம் இழந்து இருக்கிறார். அவர் கடினமான உழைப்பை செய்து வருகிறார். தற்போது ஆடுகளம் பரந்து விரிந்து இருக்கிறது. எனவே அவர் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும். அவர் இதுவரை தனக்கென்று ஒரு நல்ல பெயரை கட்டி எழுப்பி இருக்கிறார். ஆடுகளத்திற்குள் நுழைந்ததும் அதிரடியாக விளையாடி ஒரு அமைப்பை செட் செய்து விட்டு செல்கிறார். எனவே இனி அது போன்று இல்லாமல் முதிர்ச்சி அடைந்து சிங்கிள்ஸ் ரொட்டேட் செய்ய பழக வேண்டும்” என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.






