யுவராஜ் சிங்க்கு அப்புறம் இதை அழகா செய்ய.. சாம்சனால் மட்டுமே முடியும்.. நான் பெரிய ரசிகன் – மஞ்சுரேக்கர் பேட்டி

0
108

இந்திய டி20 கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக தற்போது சஞ்சு சாம்சன் தடம் பதித்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது அபார பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சாம்சன் குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நிலையான இடத்தைப் பிடித்த சஞ்சு சாம்சன்

கேரளாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆனா சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் இந்திய அணியில் அவருக்கு நிலையற்ற செயல்பாடுகளின் காரணமாக அவ்வப்போது மட்டுமே வாய்ப்புகள் கிடைத்தது. இந்த சூழ்நிலையில் கடந்த சில வருடங்களாக ராஜஸ்தான் அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்திய அணியில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும் அதற்குப் பிறகு தனது நிலையான பேட்டிங்கை வெளிக்காட்ட ஆரம்பித்தார்.

கடைசியாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ச்சியான சதங்கள் விளாசி தனது திறமையை சர்வதேச கிரிக்கெட்டிலும் காட்டினார். மேலும் அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலும் சஞ்சு சாம்சன் முதிர்ச்சியான ஆட்டத்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சாம்சன் குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

யுவராஜ் சிங்க்கு பிறகு இவரால் மட்டுமே முடியும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” தன்னம்பிக்கை, லேசான முதிர்ச்சி ஆகியவற்றோடு சாம்சன் தனது விக்கட்டுக்கு கூடுதல் மதிப்பு கொடுத்து விளையாடுகிறார். சாம்சன் நீண்ட இன்னிங்ஸ் விளையாடுகிறார். ஒரு இன்னிங்ஸ் மட்டுமல்ல மீண்டும் மீண்டும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு சில வீரர்கள் தாமதமாக மலர தொடங்குவார்கள், இந்த விஷயத்தில் சஞ்சு சம்சனும் அப்படித்தான். நான் இப்போது சாம்சனின் பெரிய ரசிகன் என்று கூறலாம்.

இதையும் படிங்க:முகமது சமி கம்பேக்.. இங்கிலாந்து டி20 தொடர்.. 2 முக்கிய மாற்றம்.. புதிய துணை கேப்டன்.. மாஸான இந்திய அணி அறிவிப்பு

முன்பே அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார் என்று தோன்றியது ஆனால் ரன்கள் இல்லை. ஆனால் இப்போது அழகான பேட்டிங்கோடு ரன்களும் வரத் தொடங்கி இருக்கிறது. ஒரு பேட்ஸ்மேன் தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு போட்டிகளில் விளையாடினால் அவரது இயல்பான ஆட்டம் வெளிவரும். எனவே சாம்சன் தற்போது அது போல இருக்கிறார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் பற்றி பிரச்சினை இல்லை எனவே சாம்சனால் எளிதாக சிக்சர் அடிக்க முடியும். யுவராஜ் சிங்குக்குப் பிறகு சீரான இடைவெளியில் எளிதாக சிக்சர் அடிக்கக்கூடிய ஒரு வீரர் இருக்க முடியும் என்றால் அது சாம்சன் ஆக மட்டுமே இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -