பாக் கேப்டனுக்கு மகிழ்ச்சி இல்லை.. அவர எதுக்குங்க டீம்ல எடுத்தீங்க.. தேர்வாளர்களை சாடிய பசித் அலி

0
36

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற 19ஆம் தேதி கராச்சியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணி தேர்வு குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடிய நிலையில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களம் இறங்கிய நிலையில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இதில் பாகிஸ்தான் அணியின் ஃபஹீம் அஷ்ரப் பேட்டிங்கில் 22 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 2.2 ஓவர்கள் மட்டுமே வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். மேலும் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பசித் அலி அஷ்ரப்பை தேர்வு செய்ததில் கேப்டன் முகமது ரிஸ்வான் மகிழ்ச்சி அடையவில்லை என்று பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

முகமது ரிஸ்வான் மகிழ்ச்சியாக இல்லை

மேலும் அப்படியே அவர் மகிழ்ச்சியாக இருந்திருந்தால் அந்தப் போட்டியில் தொடர்ந்து ஓவர்கள் வீச அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பார் என சில விஷயங்கள் பேசி இருக்கிறார். இவர் கூறியிருக்கும் கருத்து தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில் கேப்டன் மகிழ்ச்சியாக இல்லை என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:பேப்பர்ல அவர் கேப்டன்.. ஆனா களத்துல கோலிதான்.. ஆர்சிபிக்கு இந்த 2 விஷயத்தை அவர் தராரு – முகமது கைப்

இதுகுறித்து பசித் அலி பேசும் போது “ஃபஹீம் அஷ்ரஃப் தேர்வு செய்யப்பட்டதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மகிழ்ச்சியடையவில்லை. அதை அவர் தெளிவாக காட்டினார். ஏனென்றால் இரண்டு ஓவர்களுக்கு பிறகு தொடர்ந்து ஓவர் வீச, அவர் கையில் ரிஸ்வான் பந்தை கொடுக்கவில்லை. தோல்வி அடையும் நிலையில் இருந்த போது தான் பந்தை கொடுத்தார்” என பசித் அலி பேசி இருக்கிறார்.

- Advertisement -