கோப்பையை வென்ற போது.. கோலி செய்த செயல் மறக்கவே முடியாது.. அவங்களை மிஸ் செய்கிறேன் – தவான் உணர்ச்சி பேட்டி

0
317

2013ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சிகார் தவான் விராட் கோலி செய்த செயல் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன் ஆன இந்திய அணி

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது. அதற்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையை வென்ற நிலையில் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை எதிர்கொண்டது. இதில் அப்போது இளம் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா என அனுபவம் இல்லாத இந்திய அணியை எம்எஸ் தோனி வழிநடத்தினார். இருப்பினும் தனது அபாரமான பங்களிப்பின் மூலமாக இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

அந்தத் தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் சிகார் தவான் ஐந்து இன்னிங்ஸ்கலில் 90.75 சராசரியில் 363 ரன்கள் குவித்த தொடர் நாயகன் விருதை வென்றார். அது அவருக்கு ஒரு மறக்க முடியாத தொடராக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தனது அணி வீரர்களுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியதும் கோப்பையை ஏந்திய தருணத்தையும் தனது வாழ்நாளில் மறக்க முடியாது என்று தவான் தற்போது அளித்த பேட்டியில் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி செய்த செயல்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இவ்வளவு தீவிரமான இறுதிப் போட்டிக்கு பிறகு எனது அணி வீரர்களுடன் சாம்பியன் கோப்பையை ஏந்தியது என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் தருணங்களில் ஒன்றாகும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அதைவிட சிறந்தது எதுவும் இல்லை. வெற்றிக்குப் பிறகு விராட் கோலியின் கங்னம் ஸ்டைல் நடனம் எனக்கு ஒருபோதும் மறக்க முடியாத ஒரு மற்றொரு நிகழ்வு ஆகும். அது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்தது.

இதையும் படிங்க:சாம்சன் ஈகோவை காட்டுறாரு.. அவருக்கு நன்றி சொல்லிட்டு.. இந்த சிறுவனுக்கு வாய்ப்பு கொடுங்க – ஸ்ரீகாந்த் பேட்டி

நான் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சதம் அடித்தேன். ஆனால் எனக்கு மிகவும் தனித்துவமான உணர்வு என்னவென்றால் அணியுடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் செலவழித்த நேரம், வேடிக்கை, கலந்துரையாடல்கள் அந்தத் தருணங்கள் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தவை. நான் அவர்களை மிஸ் செய்கிறேன் அந்த தருணங்களை என் இதயத்தில் எப்போதும் வைத்திருப்பேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -