சாம்சன் ஈகோவை காட்டுறாரு.. அவருக்கு நன்றி சொல்லிட்டு.. இந்த சிறுவனுக்கு வாய்ப்பு கொடுங்க – ஸ்ரீகாந்த் பேட்டி

0
543

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தினார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்த விதம் குறித்து சில கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

மோசமான ஃபார்மில் சஞ்சு சாம்சன்

கடந்த சில வருடங்களாகவே இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க போராடி வந்த தொடக்க வீரர் சஞ்சு சாம்சன், சமீபகாலமாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்ததால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. மேலும் சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாகவும் கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் வந்த பிறகு சஞ்சுவுக்கு தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் மூன்று சதங்கள் விளாசி தனது சிறந்த பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் அவருக்கு மோசமாக அமைந்துள்ளது. ஐந்து போட்டிகளிலும் சேர்த்து சாம்சன் மொத்தமாக 51 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். தொடர்ச்சியாக சஞ்சு சாம்சன் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு ஆட்டம் இழந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ச்சரின் பந்துவீச்சில் மூன்று முறையும் மார்க் வுட் பந்துவீச்சில் ஒரு முறையும் ஆட்டம் இழந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஸ்ரீகாந்த் சாம்சன் தனது ஈகோவை காட்ட முயற்சிக்கிறார் என்று சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஈகோவை காட்ட முயற்சிக்கிறார்

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “என்னை பொருத்தவரை சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பஸ்ஸை மிஸ் செய்து விட்டதாக எனக்குத் தெரிகிறது. அவர் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அதே முறையில் ஆட்டம் இழந்து வெளியேறுகிறார். அவர் தொடர்ந்து இதே ஷாட் விளையாடி அவுட் ஆகிறார். தனது ஈகோவை காட்ட முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன். இல்லை இல்லை நான் இந்த ஷார்ட்டை தான் தொடர்ந்து விளையாடுவேன் என்று சொல்ல முயற்சிக்கிறார். அவர் ஈகோ பயணத்தில் செல்கிறாரா? அல்லது போராடுகிறாரா? என்பது தெரியவில்லை. ஆனால் இது மிகவும் வருத்தமாக உள்ளது நான் ஏமாற்றம் அடைந்தேன்.

இதையும் படிங்க:கிரிக்கெட் தாண்டி.. தோனியால் இதிலும் சாதனை படைக்க முடியும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு – பிசிசிஐ துணைத் தலைவர் பேட்டி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து நாங்கள் பேசினோம். ஆனால் அவர் இப்படியே தொடர்ந்து விளையாடினால் அவருக்கு நன்றி சொல்லலாம், மன்னிக்கவும். இப்போது இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் இருக்கிறார் எனவே அடுத்த டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என்பதே எனது கருத்து” என்று கூறி முடித்திருக்கிறார். சாம்சன் ஐந்தாவது டி20 போட்டியின் போது காயம் அடைந்து வெளியேறிய நிலையில் அவர் இன்னும் ஒரு மாத காலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -