இந்திய கிரிக்கெட்

தோனி கண்ணை பார்த்தாலே பயம் வரும்.. ஆனா கோலி அந்த கலாச்சாரத்தை மாத்துனாரு – ஷிகார் தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்த ஷிகார் தவான் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்கி பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

இவர் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி தலைமையில் விளையாடி இருக்கும் நிலையில் இருவரது கேப்டன்ஷிப் குணாதிசயங்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனியை பொறுத்தவரை இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் ஆக திகழ்ந்தவர். முதல் டி20 உலக கோப்பையிலேயே இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வெற்றி பெற்று கொடுத்து ஒரு கேப்டனாக தனது முத்திரையை பதித்தார். மேலும் 2011 ஆம் ஆண்டு இந்தியாவே எதிர்பார்த்த ஒரு நாள் உலகக் கோப்பையை கைப்பற்றி வெற்றிகரமான கேப்டனாக இந்திய ரசிகர்களின் மனதில் அமர்ந்தார்.

அதுமட்டுமல்லாமல் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் கைப்பற்றி தன்னை அசைக்க முடியாத பெரும் சக்தியாக மாறினார். அதற்குப் பிறகு தனது கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்த நிலையில், ஐசிசி தொடர்களை விராட் கோலி வெல்லாவிட்டாலும் இந்திய அணியை வெற்றிகரமான அணியாக தனது பதவிக்காலத்தில் உயர்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரின் தலைமையிலும் விளையாடிய தொடக்க வீரர் தவான் இருவரது கேப்டன்ஷிப் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது “ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. எம்எஸ் தோனி அதிகமாக பேச மாட்டார். போட்டிக்கு முன்பு ஒவ்வொரு கேப்டனும் பேசுவார்கள். ஆனால் அவர் அதிகமாக பேச மாட்டார். எப்போதும் அமைதியாக இருப்பார். போட்டி முடிந்த பிறகும் பெரிதாக பேச மாட்டார். ஒரு அணியை எவ்வாறு வழிநடத்துவது, வீரர்களை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தோனிக்கு நன்றாக தெரியும். தோனி பாய் வீரர்களிடம் கத்தி ஒருபோதும் நான் பார்த்ததில்லை. முற்றிலும் அற்புதமானவர். ஆனால் அவரது கண்களை பார்த்தாலே நீங்கள் பயப்படுவீர்கள்.

இதையும் படிங்க:சச்சின் கோலிய பார்த்த மாதிரி இருந்துச்சு.. அவங்க தான் இந்த விஷயத்தை அற்புதமா செய்வாங்க – மஞ்சுரேக்கர் பேட்டி

விராட் கோலி தீவிரமானவர். அவர் மிகவும் பிட்டாக இருப்பதால் பிட்னஸ் கலாச்சாரத்தை இந்திய அணிக்கு மாற்றி உள்ளார். அதனால் அந்த கலாச்சாரம் நீங்கள் பிட்டாக இருக்க வேண்டும் என்று கூறியது. விராட் கோலி அந்த விஷயத்தை முன்னோக்கி நகர்த்தினார். விராட் கோலி ஒரு கேப்டனாக மெருகேறிக் கொண்டே இருந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக மாறியதில் இருந்து அந்த அனுபவத்தால் தொடர்ந்து மெருகேற்றப்பட்டார்” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts