சச்சின் கோலிய பார்த்த மாதிரி இருந்துச்சு.. அவங்க தான் இந்த விஷயத்தை அற்புதமா செய்வாங்க – மஞ்சுரேக்கர் பேட்டி

0
29

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய வீரர் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி ஏற்கனவே மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்த சூழ்நிலையில் இன்று இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் அணியின் தொடக்க வீரரான சுப்மான் கில் அபாரமாக விளையாடி 102 பந்துகளில் 112 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

கில்லுக்கு இதற்கு முன்னர் விளையாடிய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள் சரியாக அமையவில்லை என்றாலும், சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் அவருக்கு சரியாக கைகூடி இருக்கிறது. அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில் கில்லின் இந்த பார்ம் அவருக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கும் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்த போட்டியில் அவர் எவ்வளவு எளிதாக சதத்தை எட்டினார் என்பது கவனிக்க கூடிய விஷயம் ஆகும். அந்த சதம் தனித்து நிற்கக் கூடியதாக இருக்கிறது. கடந்த காலங்களில் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் மேலே பார்க்கும் போது 60 அல்லது 70 ரன்கள் அடித்திருக்கிறார் என்றுதான் நினைப்பீர்கள். ஆனால் அதற்குப் பிறகு சதம் எளிதாக வந்துவிடும். 50 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு விதிவிலக்கான வீரரின் தனிச்சிறப்பு இதுவாகும்.

இதையும் படிங்க:707 ரன்.. சேசிங்கில் சாதனை படைத்த பாக் அணி.. ரிஸ்வான் சல்மான் கூட்டணி அபாரம்.. முத்தரப்பு ஒருநாள் தொடர்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்ற வீரர்களோடு ஒப்பிடும்போது கில்லை இன்னும் அதிகமாக கவனிக்க வைக்கும். ஆஸ்திரேலியாவில் நாம் பார்த்த டி20 கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் விட இந்தக் கட்டத்தில் அவரது தாக்குதல் ஆட்டம் மற்றும் தற்காப்பு, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யும் விதம் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. அவரது தொழில் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான கட்டம். 50 ஓவர் கிரிக்கெட்டில் அவருக்கு எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக மாறுவார்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -