இலங்கை மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கு பிறகு இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சந்தித்து வரும் சவால்கள் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம் காரணமாக ஒரு சீரான அணியை தேர்வு செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆசிய கோப்பை மற்றும் வரவிருக்கும் நியூசிலாந்து தொடருக்கு முன்பாக அணி நிர்வாகம் மற்றும் கௌதம் கம்பீர் கடும் அழுத்தத்தில் உள்ளனர்.
இந்திய வீரர்களின் தொடர் காயங்கள் குறித்து இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா பேசும்போது “அடுத்த முக்கியமான தொடர் நியூசிலாந்துக்கு எதிரானது, அதற்கு அனைத்து பாஸ்ட் பவுலர்களும் ஃபிட்டாக இருக்க வேண்டும். யாருக்கு மேட்ச் ப்ராக்டீஸ் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். எனவே கௌதம் கம்பீரின் ஆங்கர் மற்றும் ஃபரஸ்ட்ரேஷனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கோச் மற்றும் கேப்டனுக்கு என்ன தேவை என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். அவர்களால் தான் இந்திய அணி இயங்குகிறது, அணியை சரியாக திட்டமிட வீரர்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இந்திய அணியின் பிஸியான மேட்ச் ஷெடியூல் குறித்து அவர் பேசும்போது “இந்திய அணி கிரிக்கெட் ஈகோசிஸ்டமில் மிகவும் முக்கியமானது, இதனால் அவர்கள் மற்ற அணிகளை விட அதிக போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது. இதனால் வீரர்களுக்கு மேட்ச் மற்றும் காயம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. எனவே வரவிருக்கும் வேர்ல்ட் கப் ஃபார்மேட்டுக்கு முன்னுரிமை அளித்து வீரர்களின் வேலைப்பளுவை மேனேஜ் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
அடுத்தடுத்து வரவிருக்கும் முக்கிய தொடர்களுக்கு முன்பாக பும்ரா, சுந்தர் மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற வீரர்களின் ஃபிட்னஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.