திலக் வர்மா இல்லனா அபிஷேக் ஷர்மா.. இருவரில் சிறந்த வீரர் யார்.? இந்திய முன்னாள் கோச் வெளிப்படை பேச்சு

0
294

சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அபிஷேக் ஷர்மா திலக் வர்மா போன்ற இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்தனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் இந்த இருவரில் சிறந்த வீரர் குறித்த தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து தொடரில் ஜொலித்த இளைஞர்கள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் ஷர்மா திலக் வர்மா போன்ற வீரர்கள் தங்களது திறமையை வெகுவாக நிருபித்து இருக்கின்றனர். அதில் அபிஷேக் ஷர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஐந்தாவது போட்டியில் 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்தார்.

மற்றொரு இளம் வீரரான திலக் வர்மா இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி விரைவாக விக்கெட்டுகளை இழந்த போதிலும் 55 பந்துகளில் 75 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலையில் வெற்றி பெற வைத்தார். இவர்கள் இருவருமே இந்திய அணியின் அடுத்த எதிர்கால வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். இனி இந்திய அணி விளையாடும் அடுத்தடுத்த டி20 தொடர்களில் இவர்கள் இருவரும் நிச்சயம் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

இருவரில் சிறந்த வீரர்

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக திகழ்ந்த சஞ்சய் பாங்கர் திலக் வர்மா மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரில் தனக்கு திலக் வர்மா தான் சிறந்த வீரராக தெரிகிறார் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அபிஷேக் ஷர்மா பவர் பிளே ஓவர்களில் அதிரடியை வெளிப்படுத்தினாலும் திலக் வர்மா மிடில் வரிசையில் கூட சிறப்பாக செயல்பட முடியும் என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:ஷிவம் தூபே முதல் விக்கெட் எடுத்து.. விமர்சனம் செஞ்ச அவர பேசவே விடாம பண்ணிட்டாரு – ராபின் உத்தப்பா பேட்டி

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “திலக் வர்மா மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரில் சிறந்த வீரரை கேட்டால் நான் திலக் வர்மாவையே குறிப்பிடுவேன். பவர் பிளேவில் பீல்டிங் செட் அப் அதிகமாக இருக்கும்போது அபிஷேக் ஷர்மா ஆதிக்கம் செலுத்துகிறார். ஆனால் ஃபீல்டிங் செட் அப் விரிவடைந்து இருக்கும்போது கூட திலக் வர்மாவால் சிறப்பாக செயல்பட முடியும். மேலும் அவரது குணமும் சிறப்பானது” என்று சஞ்சய் பாங்கர் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -