இந்திய கிரிக்கெட்

அடுத்த வாசிம் அக்ரம் வக்கார் யூனிஸ் இந்த இந்திய வீரர்தான்.. அவர் சொல்வதை பந்து கேட்கும்.. ரவி சாஸ்திரி பேட்டி

தற்போதைய நவீன கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பந்து வீச்சாளராக திகழ்பவர் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பும்ரா குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், வர்ணையாளருமான ரவி சாஸ்திரி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் தற்போதைய நவீன கிரிக்கெட்டில், ஒரு சில பந்து வீச்சாளர்கள் மட்டுமே பேட்ஸ்மேன்களுக்கு நிகராக தங்களது பங்களிப்பினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இந்தியாவின் பும்ரா. இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் தனது மிகச் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை ஒரு நல்ல உதாரணமாக சொல்லலாம்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவரது பந்துவீச்சும் மேலும் இறுதிப்போட்டியில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கடைசி ஐந்து ஓவர்களில் இவர் ஆட்டத்தை மாற்றிய விதம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதில் அழியாத நினைவாக இருக்கும். இது குறித்து இந்தியாவின் முன்னால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது “பும்ராவின் பங்களிப்பு என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் இந்தியாவை சரியான போட்டி குணத்தோடு செயல்பட வைத்தது மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஐந்து ஓவர்களில் செயல்பட்ட விதம் முக்கியமாக கூறலாம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரிஸ்வானின் விக்கெட்டை சாய்ந்தது முக்கியமான கட்டம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதுதான் ஆட்டத்தின் சமநிலையை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தது. அது ஒரு புதிய ஸ்பெல்லின் முதல் பந்தில் நடந்தது.

பும்ரா இந்த உலகிற்கு என்ன தேவை என்பதை காட்டினார் . பந்து உங்கள் கைகளில் இருக்கும் போது நீங்கள் என்ன சொல்கிறீர்களோ பந்து அதற்கு தகுந்தவாறு செய்யும். ஆனால் அதை ஒரு சிலரால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும். வாஷிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் மட்டுமே வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிக சிறப்பாக செயல்பட்டார்கள். ஷேன் வார்னேவும் அதுபோலத்தான். அவர் சொல்கிறார், பந்து பிட்சில் அடிக்கிறது, லெக் ஸ்டம்ப்பைத் தாக்குகிறது.

இதையும் படிங்க:டி20 கிரிக்கெட்டில் ஓய்வு.. இனி இதை விராட் கோலி செய்யாமல் விடவே மாட்டார் – அர்னால்டு நம்பிக்கை

விளையாட்டில் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த திறமை உள்ளது. பும்ரா இந்த உலக கோப்பையில் இந்த திறமையை வைத்திருந்தார் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். பும்ராவை தற்போது இந்திய அணி குறிப்பிட்ட தொடர்களில் மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்திய அணியின் மிக முக்கிய பௌலரான இவர் முக்கிய அணிகளுக்காக மட்டுமே இனி செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -
Published by

Recent Posts