என்னவா இருக்கும்… கௌதம் கம்பீர், விராட் கோலி இடையே தொடரும் மோதல்.? முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்லேவின் கேள்வி.?

0
494

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 43 போட்டிகள் முடிவடைந்த நிலையில்  குஜராத் அணி முதல் இடத்திலும்  லக்னோ அணி இரண்டாம் இடத்திலும் இருக்கிறது .

நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ மற்றும்   பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் வைத்து நடைபெற்றது . டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது .

- Advertisement -

சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான லக்னோ ஆடுகளத்தில்  பெங்களூர் அணி 126 ரன்களை எடுத்தாலும்  லக்னோ அணியை  108 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து  18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . ஆர்சிபி அணிக்கு இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் .

இரண்டு அணிகளுமே குறைவான ஓட்டங்களில் ஆட்டம் இழந்து  இந்தப் போட்டி பரபரப்பான ஒன்றாக அமையாவிட்டாலும்  ஆட்டத்தின் இறுதியில் நடைபெற்ற சில  விரும்பத்தகாத சம்பவங்கள்  பேசு பொருளாகி இருக்கின்றன .

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்  விராட் கோலி மற்றும்  இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையேயான மோதல்  தலைப்புச் செய்தியாக அமைந்திருக்கிறது . இவர்கள் இருவரும் ஓதுவது இது முதல் முறை இல்லை என்றாலும்  இந்த மோதல் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

- Advertisement -

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்  முன்னாள் தலைமை பயிற்சியாளர் மாண  அணில் கும்ப்ளே  தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் . ஜியோ சினிமா இணையதளத்தில் பேசியிருக்கும் கும்ப்ளே  இதுபோன்ற செயல்கள் கிரிக்கெட் ஆடுகலங்களில்  தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார்

இது பற்றி பேசி இருக்கும் அவர் ” ஒரு பரபரப்பான கிரிக்கெட் விளையாட்டின் போது  அனைவரது உணர்வும் மேலோங்கி இருக்கும். அதற்காக எல்லா உணர்வுகளையும் மைதானத்தில் காட்டுவது ஒரு சரியான  நடைமுறை இல்லை  நீங்கள்  விளையாட்டு வீரராக இருக்கும் போது எதிர் அணியினரையும்  விளையாட்டையும் மதிக்க வேண்டும் . போட்டி முடிந்து விட்டால்  ஆடுகளத்தில் நடந்தவற்றை மறந்து விட்டு  சமரசம் கைகுலுக்கி  விடை பெறுவது தான் கிரிக்கெட்டிற்கு நாம் செய்யும் மரியாதை . அவர்களுக்கிடையே  என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை . ஒருவேளை இருவருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இருக்கலாம். அதனை தீர்ப்பதற்கான இடம் மைதானம் அல்ல . விராத் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற நிகழ்வு  தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.