இந்திய கிரிக்கெட்

ஒரு மேட்ச்ல முடிவு பண்ணாதீங்க.. கில் அவரோட திறமையை பார்த்து வாய்ப்பு தரணும் – கபில்தேவ் நம்பிக்கை

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்வி இன்றி இரண்டு அணிகளுக்குமே சமமாக டிராவில் முடிவடைந்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய வீரருக்கு ஆதரவாக சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

முன்னாள் கேப்டன் ஆதரவு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் காயம் அடைந்த ஆகாஷ் தீப் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு பதிலாக இந்திய ஏ அணியில் சிறப்பாக செயல்பட்ட அன்சூல் கம்போஜ் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்றார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் திறமையாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய அவரால் முதல் இன்னிங்ஸில் 18 ஓவர்கள் வீசி 89 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்த நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் அவருக்கு ஆதரவாக சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவரிடம் திறமை உள்ளது

இதுகுறித்து அவர் கூறும் போது “ஒரு அறிமுக வீரரிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள். அவர் 10 விக்கெட்டுகளும் வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் அவரது திறனை மதிப்பிட வேண்டும். அவர் திறமைசாலியாக இருந்தால் சிறப்பான எழுச்சி பெறுவார். முதல் ஆட்டத்தில் விளையாடும் போது எல்லாரும் பதட்டமாக உணருவார்கள். முடிவு சிறந்ததாக இருக்காது, ஆனால் திறமை இருப்பதாக நான் நம்புகிறேன். அதுதான் மிகவும் முக்கியமான விஷயம்.

இதையும் படிங்க:ஜெய்ஸ்வாலுக்கு செய்யறத என் மகன் வாஷிங்டனுக்கும் செய்யுங்க.. அகர்கர் நியாயமா நடக்கணும் – எம் சுந்தர் பேச்சு

அவருக்கு போதுமான நேரம் கொடுங்கள், அவர் தவறுகள் செய்வார் இது அவருக்கு முதல் தொடர் தான். காலப்போக்கில் நேர்மறையான விஷயங்கள் நடக்கும். அவர் சீக்கிரம் கற்றுக் கொள்வார் கற்றுக் கொண்ட பிறகு எந்த பிரச்சனையும் இருக்காது. தவறுகள் இருக்கும், ஆனால் அந்த தவறுகளில் இருந்து அவர் நிறைய கற்றுக் கொள்கிறார். அதுதான் இந்த விஷயத்தில் மிகவும் முக்கியமானது” என கபில் தேவ் அவருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts