ஜெய்ஸ்வாலுக்கு செய்யறத என் மகன் வாஷிங்டனுக்கும் செய்யுங்க.. அகர்கர் நியாயமா நடக்கணும் – எம் சுந்தர் பேச்சு

0
397
Sundar

இந்திய அணி மற்றும் ஐபிஎல் அணியில் தனது மகன் வாஷிங்டன் சுந்தருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என அவரது தந்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை டிரா செய்வதற்கு வாஷிங்டன் சுந்தரின் சதம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. ரிஷப் பண்ட் விளையாடாத நிலையில் ஐந்தாவது இடத்தில் அனுப்பப்பட்ட அவர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து போட்டி டிரா ஆக உதவி செய்தார்.

- Advertisement -

மக்கள் மறந்திடறாங்க

இது குறித்து வாஷிங்டன் சுந்தரின் தந்தை எம்.சுந்தர் கூறும் பொழுது “என் மகன் வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். ஆனாலும் அதை மக்கள் எளிதாக மறந்து விடுகிறார்கள். மற்ற வீரர்களுக்கு வழக்கமான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கின்றன. என்னுடைய மகனுக்கு அப்படியான தொடர் வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது”

“நான்காவது டெஸ்டில் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்தது போல தொடர்ந்து பத்து முறையாவது அந்த இடத்தில் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆச்சரியப்படும் விதமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவரை விளையாட வைக்கவில்லை. தேர்வாளர்கள் தொடர்ந்து அவர் ஆட்டத்தை பார்க்க வேண்டும்”

- Advertisement -

ஜெயஸ்வாலுக்கு செய்வதை செய்யணும்

“என்னுடைய மகன் ஒன்று அல்லது இரண்டு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும் உடனடியாக நீக்கப்பட்டு விடுகிறார். 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் 85 ரன்களும், அதே ஆண்டில் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் ஆட்டம் இழக்காமல் 96 ரன்களும் எடுத்தார்”

இதையும் படிங்க : எங்க ஸ்டோக்ஸ் பண்ணது தப்பான காரியம்.. 5 வருஷம் கழிச்சு பார்த்தா இந்தியா பண்ணது புரியும் – குக் பேட்டி

“தற்போதைய அவருடைய ஐபிஎல் அணி குஜராத் கூட அவருக்கு தொடர் வாய்ப்புகளை கொடுப்பது கிடையாது. இந்த ஆண்டு எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். 24 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வாலுக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் தொடர் வாய்ப்புகள் தந்து ஆதரவளித்ததை போல என் மகனுக்கும் செய்ய வேண்டும். ஆனால் உள்நாட்டு போட்டியில் கூட என் மகனுக்கு தொடர்வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை” என்று வருத்தமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -