உள்நாட்டு கிரிக்கெட் வேண்டாம்.. அந்த ஜாம்பவான் மாதிரி விராட் கோலி இத செஞ்சா போதும் – சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து

0
100

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சமீபத்தில் மிக மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். இது பல முன்னால் வீரர்கள் இடையே பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி மீண்டும் பழைய பேட்டிங் ஃபார்ம்க்கு வர இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கக்கூடிய வீரர் விராட் கோலி சமீப காலமாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் மோசமாக செயல்பட்ட விராட் கோலி அதற்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஆனால் அதற்குப் பிறகு விராட் கோலி மோசமான பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்தது.

குறிப்பாக அதற்கு அடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஒரே மாதிரியான முறையில் விராட் கோலி தொடர்ந்து ஆட்டம் இழந்து வந்தார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும் என்று பல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சஞ்சய் மஞ்சுரேக்கர் வித்தியாசமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக விராட் கோலி இங்கிலாந்தில் நடைபெற உள்ள கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவது அவருக்கு மிகச் சிறப்பாக இருக்கும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி இதை செய்ய வேண்டும்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி நிறைய ரெட் பால் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது எனது கருத்தாகும். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. எனவே இதற்கு முன்பாக புஜாரா செய்தது போல விராட் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி சிறப்பான அனுபவத்தினை பெறலாம்.

இதையும் படிங்க:இனி டிரெஸ்ஸிங் ரூம்ல இருந்து ஒரு நியூஸ் வெளிய வராது.. அவர் வந்துட்டாரு – ஆகாஷ் சோப்ரா பேட்டி

மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆரம்ப டெஸ்ட் போட்டிகளிலேயே விராட் கோலி எப்படி விளையாடுகிறார் என்பதை இந்திய அணி மதிப்பீடு செய்ய முடியும். நேர்மையான அறிகுறிகள் விராட் கோலியிடம் வெளிப்பட்டால் அவர் தொடர்ந்து விளையாடலாம். நாங்கள் கடைசியாக விரும்புவது இதைத்தான். ஆனால் விராட் கோலி இதற்கு முன்பு போராடியது போல விளையாடினால் அது இந்திய கிரிக்கெட் அணிக்கு நல்லதல்ல கவுண்டி கிரிக்கெட் விளையாடுவது அவருக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -