இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக தோல்வி அடைந்ததை அடுத்து கௌதம் கம்பீர் டிரெஸ்ஸிங் ரூமில் பேசிய விஷயங்களை இந்திய இளம் வீரர் சர்ப்ராஸ்கான் வெளியிட்டதாக பரபரப்பான பேச்சுக்கள் தற்போது நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இதனை தடுக்கும் விதம் குறித்து இந்திய முன்னால் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
டிரெஸ்சிங் ரூமில் கசிந்த ரகசியம்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று அதற்கு பின்னர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணத்தில் மோசமாக இழந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்திய வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய விதத்தை இந்திய இளம் கிரிக்கெட் வீரர் சர்ப்ராஸ்கான் ஊடகங்களில் தெரிவித்ததாக அறிக்கைகள் வெளியானது.
இது தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் இடையே ஆரோக்கியமற்ற சூழ்நிலைகள் நிலவி வருவதாக தெரிகிறது. மேலும் இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த விஷயங்கள் எப்படி ஊடகங்கள் வரை பரவியது என்று இந்திய முன்னால் வீரர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் நடக்கும் விஷயங்கள் எப்படி கசிய விடாமல் பாதுகாப்பது என்று குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இவர் யாராக இருந்தாலும் நிறுத்துவார்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” தற்போது மிகப்பெரிய செய்தி என்னவென்றால் இந்தியாவின் சிதான்ஷு கோடக் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மாறிவிட்டார். அவர் பயிற்சியாளர் குழுவில் சேர்க்கப்பட்டு விட்டார் இதனை பிசிசிஐ விரைவாக அறிவிக்கலாம். இந்த செய்திகள் எல்லாம் எப்படி வெளி வருகின்றன பிசிசிஐ ஏன் இதை தானாக அறிவிக்கவில்லை. நீங்கள் இதுபோன்ற செய்திகளை முன் கூட்டியே அறிவிக்க தொடங்கினால் இது போன்ற சிக்கல்கள் விரைவாக முடிவுக்கு வரக்கூடும்.
இதையும் படிங்க:சச்சின் கங்குலி கூட இதை செஞ்சது இல்ல.. இந்த கால பிளேயர்ஸ்க்கு எதுக்கு இவ்ளோ சலுகை – ஹர்பஜன் சிங் கேள்வி
சிதான்ஷு பயிற்சி அமைப்பில் நீண்ட கால தொடர்புடையவர். அவர் எனக்கு எதிராக விளையாடியுள்ளார் மேலும் அவர் நிறைய ரன்கள் எடுத்திருக்கிறார். சைடு ஸ்கிரீன் அல்லது டிரெஸ்ஸிங் ரூம் இருக்கு அருகில் செல்லும் போது அவர் யாராக இருந்தாலும் நிறுத்தக் கூடியவர். அவருக்கு ஒரு தனித்துவமான விளையாட்டு பாணி இருக்கிறது. அவர் ஒரு ரன் மிஷின். அவர் தனது தனித்திறமையால் எதிரணியை எரிச்சல் ஊட்டும் வகையில் சில விஷயங்கள் செய்வார் என்று கூறியிருக்கிறார்.