பாகிஸ்தான் பஜாரில் துணி விற்கும் முன்னாள் பிரபல சர்வதேச அம்பயர் ; காரணம் என்ன ?

0
562
Asad Rauf

ஆசாத் ரவுப் அம்பயராக அறியப்பட்ட இவரை ஐ.பி.எல் போட்டிகளை உன்னிப்பாகக் ஆரம்பக் காலங்களில் இருந்து பார்த்து வரக்கூடிய கிரிக்கெட் இரசிகர்கள் இவரை மறந்திருக்கவே முடியாது. மிகப்பெரிய அதிர்வலைகளை இந்திய கிரிக்கெட் இரசிகர்களிடம் உருவாக்கிய ஒரு முக்கிய சம்பவத்தின் ஒரு அங்கமாக இருந்தவர் இவர்!

ஆசாத் ரவூத் 1956ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூரில் பிறந்தவர். இவர் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று மூன்று சதம் மற்றும் மூவாயிரம் ரன்களை அடித்திருக்க கூடியவர். 1977ஆம் ஆண்டு முதல் முதலில் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானவர் 1991ஆம் ஆண்டு வரை விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

அடுத்து அம்பயர் ஆவதிற்கான பயிற்சிகளில் ஈடுபட்ட இவர் முதன் முதலில் 1998ஆம் ஆண்டு பாகிஸ்தான் உள்நாட்டுப் போட்டிக்கு அம்பயரான இவரை, 2000ஆம் ஆண்டு பாகிஸ்தான் உள்நாட்டில் இலங்கையோடு விளையாடிய ஒருநாள் போட்டியில் அம்பயராக அறிமுகப்படுத்துகிறது. அடுத்து பாகிஸ்தான் அம்பயர் அலீம் தார் ஐ.சி.சி எலைட் பேனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஐ.சி.சி இவரை சர்வதேச போட்டிகளுக்கான அம்பயராக 2005ஆம் ஆண்டு நியமித்தது. இவர் அடுத்து சர்வதேச அம்பயராக உயர்ந்து, பாகிஸ்தான் தாண்டி மற்ற எல்லா நாட்டுப் போட்டிகளுக்கும் அம்பயராக செயல்படுகிறார். சர்வதேச அம்பயராக இவரின் செயல் பாடு சிறப்பாக இருந்ததால் இவரை ஐ.சி.சி எலைட் பேனல் அம்பயர் குழுவில் சேர்க்கிறது.

இப்படி இவர் கிரிக்கெட் அம்பயர் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருக்கும் பொழுதுதான், 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்ட புகார் வெளிவந்து, இந்திய கிரிக்கெட்டை சூறாவளியாய் இரண்டாம் முறையாகச் சுழற்றி அடிக்கிது. அதில் சில இந்திய வீரர்களின் பெயரும், அணி உரிமையாளர், நிர்வாகிகள் பெயரும் அடிபடுகிறது.

அதே 2013ஆம் ஆண்டில் மும்பை காவல்துறை ஐ.பி.எல் தொடரில் அம்பயராக செயல்பட்ட ஆசாத் ரவூப் மீது சட்ட விரோத பந்தயம், ஏமாற்றுதல், மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனை மறுத்த ஆசாத் ரவூப் விசாரணைக்காக இந்தியா வர மறுத்துவிட்டார். வழக்கு விசாரணையின் முடிவில் மும்பை நீதிமன்றம் இவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. மும்பை காவல்துறை குற்றம் சாட்டிய 2013ஆம் ஆண்டே இவரை சர்வதேச அம்பயர் குழுவிலிருந்து ஐ.சி.சி விடுவித்துவிட்டது. வழக்கு விசாரணையின் முடிவில் குற்றவாளி என முடிவானதும், பி.சி.சி.ஐ இவருக்கு ஐந்தாண்டு தடை விதித்தது. ஆனால் இவரது கிரிக்கெட் அம்பயர் வாழ்க்கை 2013ஆம் ஆண்டே முடிந்துவிட்டது என்று கூறலாம்!

- Advertisement -

இதற்கு நடுவில் 2012ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மாடல் மற்றும் நடிகை லீனா கபூர், ஆசாத் ரவூப் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாக சுரண்டுவதாகவும், திருமணத்திற்கு மறுப்பதாகவும் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஆசாத் ரவூப் பாகிஸ்தானின் லாகூர் நகர லன்டா பஜார் மார்க்கெட்டில் துணி மற்றும் வியாபாரம் செய்து வருகிறார் என்கின்ற விசயம் வெளிவந்திருக்கிறது. லன்டா பஜார் என்பது நம் சென்னை பாண்டி பஜாரை போன்ற மார்க்கெட்தான். ஐ.சி.சி-யின் எலைட் பேனல் அம்பயர் குழுவில் இருந்து, தனது தவறான போக்கினால், இன்று ஒரு சாதாரண மார்க்கெட்டில் துணி மற்றும் காலணி விற்கும் நிலைக்கு இறங்கி இருக்கும் முன்னாள் கிரிக்கெட் அம்பயர் ஆசாத் ரவூப், மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை முன் உதாரணமாக மாறிவிட்டார்!

- Advertisement -