இந்திய கிரிக்கெட்

ரோஹித்தை அப்பவே விமர்சனம் செஞ்சாங்க.. ஆனா இந்த விஷயத்தை சொன்னது நான்தான் – இங்கி கெவின் பீட்டர்சன்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி முடித்த நிலையில் அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இரண்டு இந்திய வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர்களில் தொடர் தோல்வியை சந்தித்து பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் நிலையில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. சூரியகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதேபோல மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இவர்கள் இருவரும் ஒரு நாள் தொடருக்கு திரும்பும் நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இவர்களுக்கு ஆதரவளித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது “இவர்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் இருவருமே விளையாட்டின் ஜாம்பவான்கள். இவர்கள் உண்மையான பொழுதுபோக்கு வீரர்கள். தற்போது இவர்கள் இருவருக்கும் வயது 36 மற்றும் 37 ஆக இருக்கும் நிலையில் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட்டில் இவர்களுக்கு இருக்கிறது. இந்த நாட்டில் நீங்கள் கண்டதிலேயே சிறந்த இலக்கை துரத்தும் வீரர் விராட் கோலி தான்.

இதையும் படிங்க:வெறும் 24 மணி நேரம்.. 2 தொடர்களில் ஆன்ட்ரே ரசல்.. நாடு விட்டு நாடு மாறி அதிரடி.. சுவாரசிய சம்பவம்

உலகத்திலேயே விராட் கோலியை விட நாட்டிற்காக அதிக ஆட்டங்களை துரத்தி வெற்றி பெற்ற எந்த ஒரு பேட்ஸ்மேனும் இல்லை. எனவே விராட் கோலி மீண்டும் விளையாட வேண்டும். எனக்கு இவர்கள் இருவரையும் மிகவும் பிடிக்கும். 2012 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா அப்போது இந்திய அணியில் இடம் பிடித்த நிலையில் டி20 அல்லது ஒரு நாள் உலகக் கோப்பை என்று நினைக்கிறேன். அப்போது அவரைப் பற்றி சிறிய விமர்சனங்கள் இருந்தது. இருந்தாலும் நான் அவரை சிறந்த வீரராக வருவார் என்று கூறினேன். அது நிறைவேறி இருக்கிறது ரோஹித் சர்மா தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by