உலகின் தலைசிறந்த சுழற்பந்து ஜாம்பவான்களை தரவரிசைப்படுத்தினால் அதில் இந்தியாவின் அணில் கும்பிளேவின் பெயர் நிச்சயமாக இருக்கும். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 619 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இருப்பினும் இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் டேவிட் லாயிட் தனது மிகச் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் கும்பிளேவுக்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக பாகிஸ்தான் வீரர் ஒருவருக்கு இடம் கொடுத்திருக்கிறார்.
சுழற் பந்துவீச்சை பொறுத்தவரை இந்தியாவை பிரதிநிதிப்படுத்தும் வீரர்களில் முதன்மையானவர் அணில் கும்பிளே. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் நான்காவது இடம் வகிக்கிறார். சுழற்பந்து ஜாம்பவான் இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளோடு முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளோடு இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 704 விக்கெட்டுகளோடு மூன்றாவது இடத்திலும் இருக்க, இந்தியாவின் கும்பிளே 619 விக்கெட்டுகளோடு நான்காவது இடத்தில் இருக்கிறார்.
முரளிதரன் மற்றும் ஷேர் வார்னே ஆகியோரைப் போன்றே சமகால கிரிக்கெட்டில் கொண்டாடப்பட்டவர் இந்தியாவின் கும்ப்ளே. இதுவரை இந்திய வீரர்களால் இவரது சாதனையை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான டேவிட் லாயிட் மிகச் சிறந்த மூன்று சுழற் பந்துவீச்சாளர்களின் பெயர்களைப் பட்டியலிட்டார். அதில் ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரனுக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் அப்துல் காதரை மூன்றாவது பந்துவீச்சாளராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
கும்பிளேவை தேர்ந்தெடுக்காமல் காதரை தேர்ந்தெடுப்பது குறித்து பேசிய லாயிட் “அவர் ஒரு மிகச்சிறந்த கலைஞன், பாகிஸ்தான் அணியின் அப்துல் காதர் அற்புதமான பந்துவீச்சாளர். அவரது ரிதம், பந்து வீசும் போது வெளிப்படக்கூடிய ஆக்சன், அவரது மணிக்கட்டை பயன்படுத்தி வீசும் விதம் மிகவும் அபாரமாக இருக்கும். அதனால் வார்னே மற்றும் முத்தையா முரளிதரனுக்கு அடுத்த இடத்தில் அப்துல் காதரை வைக்கிறேன்.
கும்பளேவை விட சிறந்தவரா? என்ற நீங்கள் கேட்கிறீர்கள். ஆமாம், அழகியல் ரீதியாக பந்துவீச்சில் அவரிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது. லெக் ஸ்பின், கூக்லி, நிறைய ஸ்பின் வேரியேஷன்கள் என அனைத்தும் அவரிடம் இருக்கிறது. புள்ளி விவரங்கள் அவரிடம் சரியாக இல்லாவிட்டாலும் இந்த விதத்தில் அவர் சிறந்தவராக தெரிகிறார்” என்று டேவிட் லாயிட் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:2 மேட்ச் 0 ரன்.. இலங்கை தொடர் சரியா ஆடல.. ஆனா என் 4 வருட கனவு நிறைவேறியது.. சஞ்சு சாம்சன் பேட்டி
பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஆன அப்துல் காதர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 236 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பந்து வீசும் திறனுக்காக கும்ப்ளேவை விட அப்துல் காதர் சிறந்த பந்துவீச்சாளர் என்ற டேவிட் லாயிட் கூறி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.