2 மேட்ச் 0 ரன்.. இலங்கை தொடர் சரியா ஆடல.. ஆனா என் 4 வருட கனவு நிறைவேறியது.. சஞ்சு சாம்சன் பேட்டி

0
605

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் பிடிக்கும் நிலையான செயல் திறனை வெளிப்படுத்த முடியாமல் போராடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சஞ்சு சாம்சன் கிரிக்கெட்டில் தனது கனவு குறித்தும், இந்திய ரசிகர்கள் தனக்கு அளித்து வரும் ஆதரவு குறித்தும் சில முக்கிய கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

தனது சிறுவயதிலேயே ஐபிஎல் தொடரில் விளையாட ஆரம்பித்த சஞ்சு சாம்சன், இதுவரை மொத்தமாக 278 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை இந்திய அணிக்காக கடந்த 9 வருடங்களாக இதுவரை 30 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இவரது திறமையை அறிந்த இந்திய அணி நிர்வாகம் அவ்வப்போது வாய்ப்புகள் கொடுத்தாலும் நிலையான பங்களிப்பை வெளிப்படுத்த தடுமாறுகிறார்.

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்த சஞ்சு சாம்சன் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்த சூழ்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக தனது வாழ்க்கையில் நடைபெற்று வருவது மிகச் சிறந்த தருணங்கள் என்றும் இந்தியா அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பது தனது கனவு என்றும் சஞ்சு சாம்சன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சாம்சன் விரிவாக கூறும்போது “கடந்த மூன்று நான்கு மாதங்கள் எனது தொழில் வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணங்களாக இருக்கின்றன. உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்பது சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பாக நான் விரும்பிய கனவாகும். எனது கடைசி ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பது எனது ஆசை. இருந்தாலும் இந்திய அணியில் இடம் பிடித்து டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு தான் அது எளிதான காரியம் அல்ல என்பதை உணர்ந்தேன்.

ஆனால் நான் கடைசியாக இடம் பிடித்து விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான தொடரில் நான் எதிர்பார்த்து அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இருந்தும், நியூசிலாந்து முதல் மேற்கிந்திய தீவுகள் வரை மலையாளிகளிடமிருந்து எனக்கு கிடைக்கும் ஆதரவு அற்புதமாக இருக்கிறது. அணியின் சக வீரர்கள் நான் எங்கு சென்று விளையாடினாலும் நம்ப முடியாத அளவிற்கு ஆதரவு இருப்பதாக கூறுகிறார்கள்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் அன் கேப்டு வீரராக தோனி விளையாட முடியுமா?.. வாய்ப்பு உண்டா – அஸ்வின் கருத்து

அதனால்தான் நான் அணியில் இடம் பெறாத போது அல்லது போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறுகிற போது மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். இதற்குப் பிறகு வரும் சர்வதேசத் தொடர்களில் இந்திய அணிக்காக சாம்சன் இடம் பிடித்து விளையாடும் பட்சத்தில் நிலையான பங்களிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -