பஸ்பால் திட்டத்தை வைத்து.. ஆஷஸ் இல்ல ஒரு முட்டை கப் கூட வாங்க முடியல.. இங்கிலாந்து அணி பேசதான் லாயக்கு – முன்னாள் வீரர் தாக்கு

0
98

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது வெற்றியை பெற்று தொடரில் தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் மோசமான செயல்பாடு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெஃப்ரி பாய் காட் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதலாவது போட்டியில் வெறும் இரண்டு நாட்களில் ஆஸ்திரேலியா அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்த நிலையில் இரண்டாவது போட்டி நான்கு நாட்களுக்குள் நிறைவு பெற்றது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 334 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, ஜோ ரூட் மட்டுமே சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தார். அதற்குப் பிறகு விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 511 ரன்கள் குவிக்க, இறுதியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மோசமாக தோல்வி அடைந்திருந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது போட்டி தோல்வி அடைந்தது பல முன்னாள் இங்கிலாந்து வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மெக்கல்லம் தலைமையிலான இங்கிலாந்து அணி பேசுவதற்கு மட்டுமே சிறப்பானவர்கள் எனவும் செயலில் ஒன்றும் காட்டுவதில்லை என சில கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி ஒரு திகில் நிகழ்ச்சியை போல இருந்தது. பொறுப்பற்ற பேட்டிங் மற்றும் குறுகிய பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் என இங்கிலாந்து அணி அனைத்து துறைகளிலும் மோசமாக இருந்தது. எது எப்படி இருந்தாலும் ஆறு நாட்கள் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு ஒரு அதிசயம் தேவை. இங்கிலாந்து அணி பேசுகிறதே தவிர செயலில் ஒன்றும் நடக்கவில்லை.

இதையும் படிங்க:இந்தியா தென்னாப்பிரிக்கா டி20 தொடர்.. அதிக ரன்கள், விக்கெட் எடுக்கப்போவது யார்? முன்னாள் வீரர்கள் கணிப்பு

இந்த வகையான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு கலாச்சாரத்தால் அவர்கள் ஆஷஸ் தொடரை விட ஒரு முட்டை கப்பையை கூட இங்கிலாந்து அணியால் வெல்ல முடியவில்லை. இங்கிலாந்து அணியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிறப்பாக தயாராக இருப்பதாக கூறினார். இந்த சுற்றுப்பயணத்தை அவர்கள் நான்கு வருடங்களாக திட்டமிட்டு வந்தனர். இங்கிலாந்து கேப்டன் மற்றும் அவரது குழுவினர் சொல்வதை எங்களால் நம்ப முடியவில்லை” என்று அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -