பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் முதல் போட்டி குறித்து சமூக வலைதளத்தில் கிண்டலான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நியூசிலாந்து பாகிஸ்தான் முதல் போட்டி
1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி, முதன்முறையாக ஐசிசி தொடரை நடத்த உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த தொடரில் பங்கு பெற அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட நிலையில் இந்திய அணி மற்றும் தொடர்ந்து விளையாட மறுத்து வந்தது. மேலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்தால் பாகிஸ்தான் ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுப்பார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர் கூறி வந்தனர்.
மேலும் 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் ஐசிசி தொடர் நடைபெற உள்ளதால், இந்தத் தொடர் அந்நாட்டு மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சொந்த நாடான பாகிஸ்தான் அணி விளையாடும் முதல் போட்டிக்கு ரசிகர்கள் பெருமளவில் மைதானங்களை நிரப்புவார்கள் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
முதல் போட்டிக்கு கூட்டம் எங்கே?
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்துள்ளது. இதற்குப் பிறகு பாகிஸ்தான் அணி பேட்டிங் களம் இறங்க தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில் சொந்த நாடு பங்குபெறும் முதல் போட்டியில் ரசிகர்களின் ஆதரவை பெருமளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மைதானத்தின் பெரும் பகுதி இருக்கைகள் காலியாகவே இருந்தன. இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கிண்டலான முறையில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க:3 டிபார்ட்மெண்ட்.. எங்கள பின்னாடி போய் பாருங்க.. இந்திய அணிக்கு எதிரா சிறப்பான சம்பவம் இருக்கு – நஜ்முல் சாந்தோ பேட்டி
இது குறித்து மைக்கேல் வாகன் கூறும் பொழுது “சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற உள்ள முதல் போட்டி இதுவாக இருக்கிறது. இந்த நிலையில் உள்ளூர்வாசிகளிடம் இன்று முதல் போட்டி நடைபெற உள்ளது என்று சொல்ல மறந்து விட்டார்களா? கூட்டம் எங்கே? என்று பதிவிட்டு இருக்கிறார். இருப்பினும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது ரசிகர்கள் கூட்டம் ஆங்காங்கே இருக்கைகளை நிரப்பிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.