நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களுடைய அணி சிறப்பான முறையில் செயல்படும் எனவும் இந்திய அணிக்கு எதிராக நல்ல முறையில் தயாராகி இருப்பதாகவும் பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறியிருக்கிறார்.
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் போட்டி நடைபெற இருக்கிறது. முதல் சுற்றில் அனைத்து அணிகளுக்கும் மூன்று போட்டிகள் மட்டுமே கிடைக்கும் என்பதால், குறைந்தபட்சம் ஒரு அணி இரண்டு போட்டிகளையாவது வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணியின் பலம்
ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது பங்களாதேஷ் அணிக்கு சரியான பேட்டிங் யூனிட் இருக்கிறது. அதேபோல அவர்களிடம் நல்ல வேகப்பந்து வீச்சு யூனிட்டும் இருக்கிறது. மேலும் தேவையான விரல் சுழல் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். அவர்களின் ஒரே பின்னடைவாக மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இல்லாதது இருக்கிறது.
இன்னொரு பக்கத்தில் அவர்களுடைய விரல் சுழல் பந்துவீச்சு உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் சாகிப் அல்ஹசன் இல்லாதது பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால் பங்களாதேஷ் கேப்டன் தங்களுக்கு இது ஒரு பெரிய பின்னடைவு கிடையாது என்று மறுத்திருக்கிறார். மேலும் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
நாளை சிறப்பாக இருக்கும்
பங்களாதேஷ் அணி சமீபத்தில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்ததில் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 2023 உலக கோப்பைக்கு பிறகு இரு அணிகளும் மோதிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஏறக்குறைய இரண்டு வருடங்களாக இரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடவில்லை.
இதையும் படிங்க : 2வது முறை.. பாபர் அசாமை வீழ்த்திய கில்.. ஐசிசி ODI ரேங்க் பட்டியலில் 4 இந்திய வீரர்கள்
இதுகுறித்து நஜ்முல் சாந்தோ கூறும் பொழுது ” நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பில்டிங் என மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக இருக்கிறோம். மேலும் நாங்கள் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தொடர்ந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எங்களுக்கு ஷாகிப் இல்லாதது ஒரு பெரிய பின்னடைவாக அமையாது. மேலும் துபாய் மற்றும் பாகிஸ்தான் கண்டிஷன் எங்கள் நாட்டுடையது போலவே இருக்கும். நாங்கள் நல்ல முறையில் தயாராகி இருக்கிறோம். நாளை இந்திய அணிக்கு எதிராக சிறப்பான முறையில் வருவோம்” என்று கூறி இருக்கிறார்.