லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரில் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் ரிஷப் பண்ட் குறித்தும் லக்னோ அணி குறித்தும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் வரை பொறுத்தவரை லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி சிறப்பான வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறது. அதாவது இதுவரை விளையாடியுள்ள ஒன்பது போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி மற்றும் நான்கு போட்டிகள் தோல்வி என்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. ஏறக்குறைய சில அணிகளும் இதே நிலைமையில் இருக்கும் நிலையில் ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் நிலைமையில் லக்னோ உள்ளது.
ஆனால் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தனது பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 106 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கும் நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் வெறும் 4 ரன்னில் ஆட்டம் இழந்து இருக்கிறார். கடந்த மெகா ஏலத்தில் அவரை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில் அதிக அழுத்தம் அவர் மீது இருப்பதாக தெரிகிறது. மேலும் கடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி வரை களம் இறங்காத ரிஷப் பண்ட் இரண்டு பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் ஏதாவது இடத்தில் களம் இறங்கி விளையாடியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மோர்கன் இது குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” எளிதான கேப்டன்சி அல்லது எளிதான தலைமை என்று எதுவும் இல்லை. நீங்கள் ஃபார்மில் இல்லாத போது உங்கள் தலைமை குழு முழுமையாக உங்களை ஆதரிக்கவில்லை என்றால், விஷயம் பெரிய சிக்கலாகிவிடும். ஒரு நல்ல கேப்டன் விளையாட்டின் ஒவ்வொரு பகுதியையும் பிரிக்க முயற்சிக்கிறார். ஹர்திக்கை பொருத்தவரை தனது பேட்டிங் பவுலிங் மற்றும் அணிக்காக முடிவு எடுப்பதில் ஒரு தடையற்ற மாற்றத்தை நிர்வகிக்கிறார். ஆனால் இதற்கு நேர் மாறாக ரிஷப் பந்த் விஷயம் சற்று குழப்பமாக இருப்பது போல தெரிகிறது.
அணியின் குழுவுக்குள் சில கலவையான விமர்சனங்களால் இது ஏற்பட்டதா என்று தெரியவில்லை. மிடில் வரிசையில் ரிஷப் பண்ட் அதிக ரன்கள் குவிக்காததால் டேவிட் மில்லர் அவரது இடத்தில் களமிறங்கலாம் என்ற பேச்சுக்களும் ரிஷப் பண்ட் கீழே களம் இறங்குவது குறித்தும் விவாதிக்கப்படுகின்றன. எனவே லக்னோ அணி அதிக விலை கொடுத்து வாங்கிய வீரரோடு நிற்க வேண்டும் அல்லது இந்த திறமையான வீரரோடு நிற்க வேண்டும். ரிஷப் பண்டிற்கு நடப்பது கிட்டத்தட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு நடப்பதை போன்றதாகும். ஒரு அணிக்கு கேப்டனாக இருக்கும்போது பெரிய தருணங்களில் இருந்து விலகிச் செல்லாமல் ரிஷப் பண்ட் உண்மையாக இருக்க வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்