நம்பர் 1 இடத்தில் ஆர்சிபி.. 17 வருட ஐபிஎல்லில் யாரும் செய்யாத சாதனை.. 9 வருடம் கழித்து அசத்திய குருனால் பாண்டியா.. 6 விக்கெட்டில் டெல்லி தோல்வி

0
1258

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 45வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

டெல்லி பெங்களூர் மோதல்

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர் பாப் டூ பிளசிஸ் 26 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து மெதுவான தொடக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் அதே வேளையில் மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் பொரெல் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பின்னர் களம் இறங்கிய கருண் நாயர் 4 ரன்னில் ஏமாற்றம் அளிக்க கே.எல் ராகுல் மற்றும் அக்சார் ஜோடி ஆடுகளத்தின் சூழ்நிலையைப் புரிந்து விக்கெட்டுகளை மேற்கொண்டு விடாமல் மெதுவாக விளையாடியது. இதில் கேப்டன் அக்சார் 15 ரன்னில் வெளியேற, கேஎல் ராகுல் 39 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதிக்கட்டத்தில் ஸ்டெப்ஸ் 18 பந்துகளில் 34 ரன்கள் குவித்த நிலையில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. இதில் பெங்களூர் வீரர் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

ஆர்சிபி படைத்த சாதனை

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஜேக்கப் பெத்தல் 12 ரன்னில் ஆட்டம் இழக்க, அதற்கு பின்னர் களம் இறங்கிய படிக்கல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி மறுமுனையில் நிலைத்து நிற்க, அதற்கு பின்னர் களம் இறங்கிய கேப்டன் ராஜத் பட்டிதார் 6 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழக்க, 26 ரன்களுக்குள் 3 விக்கட்டுகளை இழந்து பெங்களூர் அணி சிக்கலில் மாட்டிக்கொண்டது. ஆனால் அதற்குப் பின்னர் களமிறங்கிய க்ருனால் பாண்டியா பொறுப்பாக விளையாடி விராட் கோலியுடன் சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க:சாதனை மகுடத்தில் மேலும் ஒரு சாதனை.. 11வது முறை.. 17 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக மாறிய விராட் கோலி

இதில் சிறப்பாக விளையாடிய பாண்டியா அரை சதம் அடித்து தனது ஆட்டத்தை தொடர, மறுமுனையில் விராட் கோலி 45 பந்துகளில் அரை சதம் அடித்து இறுதியாக 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட் ஐந்து பந்துகளை எதிர் கொண்டு மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 19 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடிக்க குருனால் பாண்டியா அற்புதமாக விளையாடி 47 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து போர் மற்றும் நான்கு சிக்ஸ் என 73 ரன்கள் குறித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். கடைசியாக 2016 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது இதை டெல்லி அணிக்கு எதிராக அரை சதம் அடித்த பாண்டியா அதற்குப் பின்னர் 9 வருடம் கழித்து இதே அணிக்கு எதிராக அரை சதம் அடித்திருக்கிறார்.ஏற்கனவே பௌலிங்கில் ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக ஆர்சிபி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலமாக பெங்களூர் அணி வெளி மண்ணில் தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெறும் முதல் அணி என்கிற சாதனையை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக 7வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலிலும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -