தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு பேட்டிங்கில் முக்கியமான ஒரு தொழில்நுட்ப பலவீனம் இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் எளிதில் சிக்கிக் கொள்வார் எனவும் இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் நைட் கூறியிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த காரணத்தினால், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு கேப்டனாக முதல் தொடரே கடினமான இங்கிலாந்து சூழ்நிலையில் அமைய இருக்கிறது.
கில் முன்பு இருக்கும் சவால்கள்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியா தாண்டி கில் இதுவரையில் வெளியில் சதம் அடித்தது கிடையாது. அவருடைய இந்த புள்ளிவிபரம் அவருக்கு பெரிய எதிராக நிற்கிறது. மேலும் தற்போது இங்கிலாந்து தொடரில் நட்சத்திர பேட்ஸ்மேன் இல்லாத காரணத்தினால் கில் பேட்ஸ்மேனாக ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
அடுத்து அணியை முன்னிருந்து எந்த அளவிற்கு ஆளுமை பண்போடு தலைமை தாங்கி எடுத்துச் செல்கிறார் என்றும் பார்க்கப்படும். எனவே ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டனாகவும் தனிப்பட்ட முறையில் மிகவும் சிறப்பாக இருந்தே ஆக வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இந்த இங்கிலாந்து தொடர் தனிப்பட்ட முறையில் அவருக்கு பெரிய சவால் ஆனதாக அமைகிறது.
இந்த பலவீனம் இருக்கிறது
இதுகுறித்து நிக் நைட் கூறும்பொழுது “இந்தியாவில் ஐபிஎல் வர்ணனையாளராக பணியாற்றிய எல்லா நேரத்திலும் கில் பேட்டிங்கின் தொழில்நுட்ப பலவீனம் பற்றி எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். அவர் விளையாடும் பொழுது நம்பிக்கை குறைவாக இருக்கும் நேரத்தில் அவர் முன் கால் குறுக்காக அதிகமாக நகரும். அவர் எப்பொழுதெல்லாம் தன்னம்பிக்கை குறைவாக பேட்டிங்கில் அதிகம் முயற்சி செய்கிறாரோ அப்பொழுதெல்லாம் இது நடக்கிறது”
இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்ல இந்த பொறுப்பு மட்டும் எனக்கு வேணாம்.. ஜெய்ஸ்வால் செஞ்ச அது வேற லெவல் – ஜோ ரூட் பேச்சு
“எனவே உடலில் சுழற்சி, பந்தை அணுகுதல் மற்றும் பேடுகளை சுற்றி விளையாடுதல் ஆகியவற்றை சமீபத்தில் அவரிடம் அதிகமாக பார்க்க முடியவில்லை. நேர்மையாக சொல்வது என்றால் ஒரு இடது கை பந்துவீச்சாளர் பேடுகளுக்குள் பந்தை ஸ்விங் செய்வார் என்றால், அவருடைய முன் கால் குறுக்காக செல்லும் பொழுது, இரண்டு கால்களும் எக்ஸ் போல் மாறி விடுவதால், நிச்சயம் சிக்கிக் கொள்வார். இது அவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்” என்று கூறியிருக்கிறார்






