இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அடுத்த நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் தொடர்ந்து அவர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆதரவாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஒரே ஒரு மோசமான சீசன்
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கடைசியாக டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் சமீபத்தில் அவர்களது பேட்டிங் ஃபாம் சிறப்பாக அமையவில்லை. அதிலும் குறிப்பாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்களது மோசமான பேட்டிங் ஃபார்ம் இந்திய அணியை வரலாற்று தோல்விகளுக்கு வழி வகுத்தது.
எனவே இவர்கள் இருவரும் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் ஒரே ஒரு மோசமான சீசனால் இவர்கள் இருவரையும் கெட்ட மனிதர்களாகவோ அல்லது மோசமான கிரிக்கெட் வீரர்களாகவோ மாற்றி விடாது. இவர்கள் இயந்திரங்கள் அல்ல எனவே அவர்கள் இருவரும் திரும்ப சிறப்பாக விளையாடுவார்கள் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இருவரும் கொண்டாடப்பட வேண்டும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இது ஒரு அநியாயம். இவர்களைப் போல அதிக ரன்கள் எடுத்த வீரரை ஓய்வு பெற வேண்டும் என்று எப்படி சொல்ல முடியும். இது ஒரு விவாதம் அல்லது தலைப்பாக இருக்கலாம். ஆனால் அதைவிட இவர்கள் அதிக மரியாதைக்கு தகுதியானவர்கள். ரோஹித் மட்டும் விராட் ரோபோட்கள் கிடையாது. ஒவ்வொரு முறை பேட்டிங் செய்யும் போது வெளியே சென்று சதம் அடிக்க மாட்டார்கள். ஆஸ்திரேலியா பயணம் அவர்களுக்கு மோசமான சுற்று பயணமாக இருந்திருக்கலாம்.
இதையும் படிங்க:633 விக்கெட்.. முன்னாள் சிஎஸ்கே வீரரின் ரெக்கார்டை உடைத்து ரஷீத்கான் சாதனை.. 39 ரன்னில் எம்ஐ வெற்றி.. எஸ்ஏ டி20
ஆனால் அது அவர்களை மோசமான மனிதர்கள் ஆக்குமா? அல்லது மோசமான கிரிக்கெட் வீரர்கள் ஆக்குமா நிச்சயமாக இல்லை. அவர்களும் மனிதர்கள் தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருமே மக்களை மகிழ்விக்கிறார்கள். எனவே கிரிக்கெட்டின் கடைசி கட்டத்தில் அவர்கள் இருக்கும் போது அவர்கள் கொண்டாடப்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.