இங்கி கேப்டனை இல்லை.. தனது பெஸ்ட் கேப்டன்களாக தோனியை தேர்வு செய்து.. ஆச்சரியத்தை ஏற்படுத்திய மொயின் அலி

0
103

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வீரரான மொயின் அலி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். இவர் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி ஒரு நாள் உலக கோப்பையை வென்ற போது அதில் முக்கிய வீரராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் மொயின் அலி தனது கிரிக்கெட் கரியரில் தான் விளையாடிய இரண்டு சிறந்த கேப்டன்களின் பெயர்களை வெளிப்படுத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

2014ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்காக சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆல் ரவுண்டர் வீரர் மொயின் அலி இதுவரை 68 டெஸ்ட் போட்டிகள், 138 ஒரு நாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடி அனைத்து வடிவத்திலும் 6,678 ரன்களும், 366 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையில் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்ற போது அதில் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் 2022ஆம் ஆண்டு பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பை வென்ற போது அந்த அணிக்காகவும் தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த மொயின் அலி இதுவரை தான் விளையாடிய சிறந்த கேப்டன்களில் 2019ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக உலக கோப்பையை வென்று கொடுத்த மோர்கனை தேர்வு செய்ததோடு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி யையும் தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வான மொயின் அலி சிஎஸ்கேவில் நிரந்தர இடத்தை பிடித்தார். பேட்டிங், பந்து வீச்சு என அனைத்திலும் சிறந்து விளங்க மகேந்திர சிங் தோனியின் ஆதரவு இவருக்கு பெரிய அளவில் அமைந்தது. இங்கிலாந்து அணியில் விளையாடினாலும் அந்த கேப்டன்களே இவரை சரியாக பயன்படுத்தாத போது தோனி இவரது திறமையை அறிந்து சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு சரியாக பயன்படுத்தினார். 2021ஆம் ஆண்டு சென்னை அணியில் வாய்ப்பு கிடைத்த பிறகே 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் மொயின் அலி தேர்வு செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் இது குறித்து மொயின் அலி பேசும் போது ” வெளிப்படையாக கூற வேண்டும் என்றால் சிறந்த கேப்டனாக இயான் மோர்கன் மற்றும் எம்எஸ் தோனியின் பெயரை குறிப்பிடுவேன். இங்கிலாந்துக்கு மோர்கனின் தலைமை அபாரமாக இருந்திருக்கிறது. நம்ப முடியாத கேப்டன் மற்றும் சிறந்த தலைவராக இருந்திருக்கிறார். ஒரு சிறந்த தலைவருக்கான தகுதிகள் அனைத்தும் மோர்கனிடம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:அவங்க கூட ஆடுனத பத்தி பேசி யூஸ் இல்ல.. இந்தியா எவ்ளோ ஸ்ட்ராங்னு இதைப் பார்த்தா புரியும் – லிட்டன் தாஸ் பேட்டி

2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணிக்காக வென்று கொடுத்த ஜோஸ்பட்லர் தலைமையின் கீழ் மொயின் அலி விளையாடினாலும் அவரது பெயரை குறிப்பிடாமல் தோனியின் பெயரை குறிப்பிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -