அவங்க கூட ஆடுனத பத்தி பேசி யூஸ் இல்ல.. இந்திய அணி எவ்ளோ ஸ்ட்ராங்னு இதைப் பார்த்தா புரியும் – லிட்டன் தாஸ் பேட்டி

0
1046

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் இந்தியாவின் சொந்த மண்ணில் நடைபெற உள்ளது. வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரை வென்றுள்ள நிலையில் தற்போது இந்த இரண்டு அணிகளுக்கு இடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வங்கதேச வீரரான லிட்டன் தாஸ் இந்திய தொடர் குறித்து சில சுவாரசியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச அணி தற்போது மிகுந்த நம்பிக்கையோடு காணப்படுகிறது. ஏனென்றால் உலகின் வலுவான அணிகளில் ஒன்றாக கருதப்படும் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்த்தி பெரிய வரலாறு படைத்து தற்போது அதே நம்பிக்கையோடு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் இறங்க உள்ளது.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் வலுவாக இருக்க இந்திய அணிக்கு இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணிக்கு அதற்கு அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளோடு வலுவான தொடர்பு இருப்பதால் இந்த தொடரில் வெற்றி பெற்று இந்தியா முன்னிலை பெற மிகவும் முயற்சிக்கும். இந்த சூழ்நிலையில் வங்கதேச அணி வீரரான லிட்டன் தாஸ் இந்திய அணிக்கு எதிரான தொடர் சவாலாக இருக்கும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறோம். வெளிப்படையாக கூற வேண்டுமானால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை விட்டு வெளியேற ஊடகங்கள் சிறிது உதவ வேண்டும். இனி பாகிஸ்தான் தொடர் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. இந்திய அணிக்கு எதிரான தொடர் சவாலாக இருக்கும் எனவே கடந்த காலத்தை பற்றி அதிகம் பேசாமல் இருக்க வேண்டும். ஆனால் கடந்த காலத்தில் பெற்ற உத்வேகத்தை எடுத்துக்கொள்வது நம்மை தரும்.

நாங்கள் இந்தியாவுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் விளையாடும் போது எப்போதுமே அது சவாலாக இருக்கும். இது மிகவும் சவாலான தொடர் அல்லது எளிதான தொடர் என்று நான் எதையும் கூற மாட்டேன். அவர்கள் தங்களுடைய சூழ்நிலையில் மிகவும் வலுவான அணி. நீங்கள் தரவரிசை பட்டியலை பார்த்தால் அவர்கள் மிகவும் உயர்ந்த அணி. எனவே இந்த தொடர் எங்களுக்கு நிச்சயம் போட்டி மிகுந்த தொடராக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:பாகிஸ்தான் டெஸ்ட்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. 2 மாஸ் வீரர்கள் வருகை.. பாக் ஃபைனல் வாய்ப்புக்கு செக்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட லிட்டன் தாஸ் 56 மற்றும் 138 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். எனவே இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் இவரது பங்களிப்பு வங்கதேச அணிக்கு நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -