ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான மெகா ஏலம் சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
இந்த சூழ்நிலையில் முன்னாள் டெல்லி அணியின் உதவி பயிற்சியாளரான பிரவீன் ஆம்பிரே ப்ரீத்விஷா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலம்
ஐபிஎல் அணிகளில் சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த மெகா ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில் அதற்கு முன்னதாக கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருந்த ரிஷப் பண்டை கழட்டிவிட்டது. அதற்கு பதிலாக ஏலத்தில் கேஎல் ராகுலை 14 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும் டெல்லி அணிக்காக சிறந்த வீரர்களை வாங்கி வலுவாக அணியை கட்டமைத்தது.
இருப்பினும் டெல்லி அணியின் சிறந்த வீரராக கருதப்பட்ட 23 வயதான பிரித்விஷா இந்த ஐபிஎல் தொடரில் வேறு எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. ஒழுக்கமின்மை மற்றும் உடல் தகுதி காரணமாகவே அவர் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் கிடைக்கும் பணம் மற்றும் புகழை சரியாக கையாள முடியாத காரணத்தால் தான் பிரித்விஷாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது என்று டெல்லி அணியின் முன்னாள் பயிற்சியாளரான பிரவீன் ஆம்பிரே கூறியிருக்கிறார்.
இப்போதாவது அவர் விழித்துக் கொள்ள வேண்டும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அவரைப் போன்ற திறமைசாலிகள் கீழே செல்லும் போது பார்ப்பதற்கு ஏமாற்றமாக உள்ளது. இன்னும் அவரால் 30 பந்துகளில் அரை சதம் அடிக்க முடியும். ஒருவேளை இதில் கிடைக்கும் புகழ் மற்றும் பணத்தை அவரால் கையாள முடியாமல் இருக்கலாம். அவரது ஐபிஎல் தொடர் கிரிக்கெட்டில் இது ஒரு கவனிக்கப்படக் கூடிய விஷயமாக இருக்கலாம். திறமையால் மட்டுமே நீங்கள் மேலே செல்ல முடியாது ஒழுக்கம் அர்ப்பணிப்பு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
இதையும் படிங்க:516 ரன் டார்கெட்.. பவுமா ஸ்டப்ஸ் மாஸ் பேட்டிங்.. இலங்கை அணி தடுமாற்றம்.. தென் ஆப்பிரிக்கா வெற்றி முகம் – முதல் டெஸ்ட்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வினோத் காம்ப்ளியின் உதாரணத்தை அவருக்கு கொடுத்தேன்.இந்த தலைமுறைக்கு விஷயங்களை கற்றுக் கொடுப்பது எளிதானது அல்ல. ஐபிஎல்லில் மட்டும் அவர் 30 முதல் 40 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்க வேண்டும். இருப்பினும் இந்த தொடரில் அவர் விற்கப்படாமல் இருப்பது நல்ல விஷயம்தான். ஏனென்றால் இப்போதாவது அவர் விழித்துக் கொள்வார் என்று நம்புகிறேன். அவருக்கு வயது 23 ஆக இருக்கும் நிலையில் ஒரு ஐஐஎம் பட்டதாரிக்க கூட இவ்வளவு பணம் கிடைத்திருக்காது. இளம் வயதில் சம்பாதிக்கும் போது கவனத்தை இழக்கக்கூடும்” என்று கூறி இருக்கிறார்.