“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”….லங்கா பிரீமியர் லீக்கில் களம் இறங்க இருக்கும் சிஎஸ்கே வின் குட்டி தல சுரேஷ் ரெய்னா!

0
13248

இலங்கையில் நடைபெற இருக்கும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்களுக்கான ஏலம் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ளது .

லங்கா பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஐபிஎல் போன்று இலங்கையில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியாகும் . இந்தப் போட்டியில் ஐந்து அணிகள் பங்கு பெறும் . வருடம் தோறும் ஜூன் முதல் ஆகஸ்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த போட்டி தொடர்கள் நடைபெற்று வருகின்றன .

- Advertisement -

2018 ஆம் ஆண்டு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட இந்த போட்டி தொடர் சில பொருளாதார காரணங்களால் 2020 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது . கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் திஸாரா பெரேரா தலைமையிலான ஜாஃப்னா கிங்ஸ் அணி ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான கொழும்பு ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது .

இந்தப் போட்டி தொடரில் நான்காவது சீசன் வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி முடியே இருக்கிறது . இந்தப் போட்டி தொடரிலும் பிற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக் போட்டிகளைப் போலவே சர்வதேச வீரர்கள் ஏலம் முறையில் கலந்து கொள்கின்றனர் . இதற்கான வீரர்களின் ஏலம் வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது .

இந்த வருடம் நடைபெற இருக்கும் ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குட்டி தல என அழைக்கப்படும் சுரேஷ் ரைனா கலந்துகொள்ள இருக்கிறார் . இதற்காக அவர் தனது பெயரையும் பதிவு பதிவு செய்துள்ளார் . தன்னுடைய அடிப்படை விலையாக 50000 அமெரிக்க டாலரை நிர்ணயம் செய்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா . .

- Advertisement -

லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் இதற்கு முன்பு இந்தியாவில் இருந்து முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் 2020 ஆம் ஆண்டு ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . 2020 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் முதல் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக அவர் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

கடந்த ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா சமீபத்தில் நடைபெற்ற லெஜென்ஸ் கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்றார் . இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய இவர் சிஎஸ்கே அணி நான்கு முறை பட்டங்களை வென்ற போது முக்கிய பங்களிப்பையும் அளித்திருக்கிறார் . சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்களை குவித்திருக்கும் வீரரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது . இதுவரை 176 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருக்கும் இவர் 4687 ரண்களை குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .