சிஎஸ்கேல ஆடியும் சொல்றேன்.. தோனியை விட கங்குலி தான்.. முன்னாள் வீரர் தைரியமான பேட்டி

0
202

கங்குலி இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக இருந்தவர். இந்திய அணி என்றால் அந்நிய மண்ணில் ஜெயிக்காத அணி என்ற வரலாற்றை மாற்றி ரசிகர்களால் செல்லமாக தாதா என்று அழைக்கப்படும் அற்புதமான வீரர்.

இவர் களமிறங்கினால் எதிரணி கேப்டனின் கவனம் ஆப் செட்டில் மட்டுமே இருக்கும். காரணம் ஆப் சைடில் பீல்டர்களுக்கு நடுவே பௌண்டர்களை விளாசுவதில் கங்குலி கில்லாடி. இந்திய வீரர்கள் பௌண்டரிகளில் அதிக அளவில் ரன்களை குவிப்பார்கள் என இருந்த காலகட்டத்தில் பந்தை பலமுறை மைதானத்திற்கு வெளியே அனுப்பி அசத்திய கங்குலியின் அதிரடி ஆட்டத்தில் அதிர்ந்தன மைதானங்கள். கடந்த 2000ஆம் ஆண்டு கேப்டனாக பதவியேற்ற இவர், சறுக்கி விழுந்த இந்திய அணியை தனது கேப்டன்ஸி திறமையால் தூக்கி நிறுத்தியவர்.

- Advertisement -

கடந்த 2001 இல் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு வெற்றிகளை பெற்று, தொடரையும் கைப்பற்றி அன்னிய மண்ணில் ஜெயிக்காத அணி என்ற வரலாற்றை மாற்றிக் காட்டினார். தற்போது கோலி, தோனி போன்ற வீரர்கள் கேப்டனாக அதிக வெற்றிகளை குவிப்பதற்கும் காரணம் கங்குலி.

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தோனி தலைமையின் கீழ் விளையாடிய வீரர்களில் பாதி பேர் கங்குலி கேப்டனாக இருந்த காலகட்டத்தில் வாய்ப்பு பெற்றவர்கள். இவரது தலைமையின் கீழ் அறிமுகமான வீரர்தான் பார்த்திவ் பட்டேல். தனது 17 வயதில் இந்தியாவிற்கு அறிமுகமானார்.

2002 மற்றும் 2004க்கு இடையில் கங்குலியின் தலைமையின் கீழ் 15 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர். மேலும் ஐபிஎல்லில் தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர்.

- Advertisement -

சமீபத்தில் தோனி, கங்குலி இவர்கள் இருவரில் யார் உங்கள் ஃபேவரிட் என்பது குறித்த கேள்விக்கு சுவாரசியமாக பதில் அளித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது
” கங்குலி தோனி இருவருமே வெற்றிகரமான கேப்டன்கள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் உங்கள் முதல் கேப்டனாக ஒருவர் இருக்கும்போது, அவரிடம் எப்போதும் மனதிற்கு நெருக்கமான ஒரு பகுதி இருக்கும். நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்று வருடங்கள் விளையாடி இருக்கிறேன். எனது பேட்டிங் ஃபார்ம் சரியாக இல்லாத காலகட்டத்திலும் என்மேல் நம்பிக்கை வைத்து தோனிதான் சென்னை அணிக்காக தேர்வு செய்தார்.

அந்தப் பெருமை அவரையே சேரும்.
ஆனால் தோனிக்கு முன்னரே எனது டெஸ்ட் அல்லது ஒரு நாள் போட்டி அறிமுகம் கங்குலியின் தலைமையில் கீழ் இருந்தது. கங்குலி எப்போதும் வீரர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர். அதனால் எனது கேப்டனாக நான் கங்குலியை தேர்வு செய்கிறேன் மேலும் கோலி, கம்பீர் இருவருமே மைதானத்திற்கு வெளிய கண்ணியமான வீரர்கள்.

நீங்கள் உங்கள் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடும் போது ஒருவித ஆக்கிரமிப்பு உணர்வு வெளிவரும். ஆனால் நாம் அதிகம் விராட் கோலியை விரும்புகிறோம். கம்பீர் உடனும் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். ஆனால் விராட் சற்று ஆக்ரோஷமானவர்” என்று கூறி இருக்கிறார்.