மக்கள் பாராட்டணும்னு இதை செய்யாதீங்க.. சேவை செய்ய ஐபிஎல் விளையாட வேண்டாம்.. ராஜஸ்தான் அணியை விமர்சித்த ராயுடு

0
45

முன்னாள் ஐபிஎல் சாம்பியன் ஆன ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணி குறித்து இந்திய மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு சில முக்கிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

அம்பாதி ராயுடு கேள்வி

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல் ஆண்டிலேயே ஷேர் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. அதற்குப் பின்னர் 17 ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் இன்னமும் ஒருமுறை கூட அந்த அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக ராஜஸ்தான் அணி இளம் வீரர்கள் மீது அதிக முதலீடு செய்யும் ஒரு அணியாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சர்வதேச வீரர்களை காட்டிலும் ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேல், ரியான் பராக் போன்ற வீரர்களை தக்க வைத்து ஜாஸ் பட்லர், போல்ட் போன்ற சர்வதேச சிறந்த வீரர்களை தக்க வைக்காமல் வெளியே விட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் 13 வயதே ஆன வைபவ் ரகுவன்சியை தங்கள் அணிக்காக வாங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இளம் வீரர்கள் மீது அதிக அளவு முதலீடு செய்தாலும் அவர்களால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அளவுக்கு பெரிய வெற்றிகளை பெற்று தர முடியவில்லை. மாறாக தற்போது புள்ளி பட்டியலில் 6 தோல்விகளை அடைந்து 8வது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அம்பாதி ராயுடு இது குறித்து சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

17 ஆண்டுகள் ஆகிவிட்டது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அவர்கள் பல வருடங்களாக இளைஞர்களுக்காக நிறைய முதலீடு செய்துள்ளனர். அவர்களால் அணிக்கு என்ன கிடைத்துள்ளது? அவர்கள் ஐபிஎல் தொடரை வென்று 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. இளம் வீரர்கள் மீது முதலீடு செய்வதை அவர்கள் தங்களது பலம் போல காட்டிக் கொள்கிறார்கள். இது அவர்கள் விளையாட்டுக்குச் செய்யும் ஒரு சேவை போல இருக்கிறது. ஆனால் விஷயம் அதுவல்ல, நீங்கள் போட்டியிட தான் இங்கே இருக்கிறீர்கள்.

இதையும் படிங்க:சிஎஸ்கேவால் நான் ரொம்ப சலிப்பாயிட்டேன்.. எங்க டீமுக்கு ஒன்னுதான் சொன்னேன் – பொல்லார்டு பேச்சு

நீங்கள் ஐபிஎல் தொடரை வெல்வதற்கு தான் இங்கே போட்டியிடுகிறீர்கள். அதை வெல்ல அணிகள் ஏற்றுக் கொண்ட வழிகள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் ராஜஸ்தான் அணி அது எதையும் பின்பற்றுவதில்லை. மாறாக உலகில் உள்ள பல இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவதன் மூலமாக மக்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்று ராஜஸ்தான் அணியினர் நினைத்துக் கொள்கிறார்கள்” என்று அம்பத்தி ராயுடு காட்டமாக சில விமர்சனங்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -