நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களிடையே தான் என்ன கூறினேன் என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 176 ரன்கள் 20 ஓவர்களில் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆட்டம் இழக்காமல் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அதிரடி அரைசதங்கள் அடிக்க, அந்த அணி வெறும் 15.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிஎஸ்கே அணியின் சமீபத்திய சாதனை
ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இரண்டுமே தலா ஐந்து முறை கோப்பையை வென்று இருந்த பொழுதும், கடந்த நான்கு வருடங்களில் சிஎஸ்கே அணி இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு மிகவும் சுமாராகவே இருந்திருக்கிறது.
இந்த நிலையில் மிக குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் தனிப்பட்ட முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வந்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் தொடர் வெற்றிகளை மும்பை இந்தியன்ஸ் அணியால் சிறந்த வீரர்களை கொண்டிருந்த பொழுதும் தடுக்க முடியவில்லை. கடந்த முறை சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
எங்கள் வீரர்களிடம் இதையே சொன்னேன்
இந்த நிலையில் சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக தங்கள் வீரர்களிடம் தான் கூறியது என்ன என்று கீரன் பொல்லார்டு பேசும் பொழுது “இந்த போட்டியின் ஆரம்பத்தில் அணி வீரர்கள் மத்தியில் பேசுவதற்கு எனக்கு ஜெயவர்த்தனே வாய்ப்பு கொடுத்தார். நான் அவர்களிடம் சொன்ன விஷயங்களில் மிகவும் முக்கியமானது ‘ கடந்த இரண்டு வருடங்களாக சிஎஸ்கே விளையாடியதாக சொல்லி பாராட்டி எனக்கு அலுத்து விட்டது. மீண்டும் என்னால் செய்ய முடியாது’ என்று சொன்னேன். நேற்று எங்கள் வீரர்கள் வெளியேறி விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது”
இதையும் படிங்க : 14 வயசு சூரியவன்சியை.. பாகிஸ்தான்ல வெளிய தூக்கி எறிஞ்சிடுவாங்க.. காரணம் இதுதான் – பசித் அலி பேட்டி
“நாங்கள் நிச்சயமாக சூரியகுமார் யாதவை பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் களம் இறக்க விரும்பினோம். அவர் அதிகப்படியான பந்துகளை சந்திக்க வேண்டும் என்று நினைத்தோம். எதிரணி எப்படியானது மற்றும் சூரியகுமார் யாதவ் நிலைத்து நின்றால் எப்படிப்பட்ட தாக்கத்தை கொடுப்பார் என்று நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பீல்ட் செட்டப்பை சரியாக உணர்ந்து அருமையாக பேட்டிங் செய்தார்” என்று கூறியிருக்கிறார்.






