ருதுராஜ் செய்யும் தப்புக்கு அவர் மட்டுமே காரணம் அல்ல.. சிஎஸ்கேவில் என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியும் – ஷேன் வாட்சன் பேட்டி

0
300

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி மற்றும் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கும் நிலையில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் தற்போதைய கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கேவின் தொடர் தோல்வி

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக எம்எஸ் தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இளம் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்றார். சென்னை அணி கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டாலும் முதல் சீசன் என்பதால் அவருடைய கேப்டன்ஷிப் குறித்து பெரிதாக எந்த விமர்சனங்களும் எழவில்லை. இருப்பினும் இந்த சீசனில் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் தற்போது 9வது இடத்தில் இருக்கிறது.

மேலும் சேப்பாக்கம் மைதானத்திற்கு தகுந்தவாறு ஏலத்தில் மூன்று உலக தரமான சுழற் பந்துவீச்சாளர்களை வாங்கிய நிலையில், மூன்று பேரின் ஓவர்களையும் முழுதாக முடிக்காமல் வேகப்பந்துவீச்சாளர்களின் பக்கம் அதிகமாக சாய்கிறார் என்ற விமர்சனம் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதுகுறித்து சிஎஸ்கே முன்னாள் வீரரும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரருமான ஷேன் வாட்சன் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அவர் சுழற் பந்துவீச்சை எப்படி நிர்வகிக்கிறார் என்பதை பொறுத்து பார்க்கும்போது சுழற் பந்துவீச்சாளர்களை முழுவதுமாக பயன்படுத்த வேண்டிய போட்டிகளில் அவரது செயல்பாடு சுவாரசியமாக இருக்கும். குறிப்பாக சென்னை சேப்பாக்கத்தில் பந்து நன்றாக திரும்பும் மைதானங்களில் அவர் தனது சுழற் பந்துவீச்சாளர்களை முழுவதுமாக பயன்படுத்துவதில்லை. ஆனால் ஒரு கேப்டனாக அந்த முடிவுகளை அவர் தனியாக எடுப்பதில்லை. ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் ஒரு பெரிய அளவிலான தயாரிப்பு மற்றும் தகவல்கள் அவருக்கு அனுப்பப்படும்.

இதையும் படிங்க:சிஎஸ்கே பிட்சை குறை சொல்லாம ஆடனும்.. நூர் இல்ல பதிரனா வெளிய போகணும்.. காரணம் இதான் – அம்பதி ராயுடு பேச்சு

அவர் களத்தில் இறுதி முடிவை எடுத்தாலும் அது ஒரு கூட்டு முடிவாக மட்டுமே இருக்கும். எனவே அந்தந்த தருணங்களில் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதா? அல்லது வேகப்பந்து வேச்சாளர்களை பயன்படுத்துவதா? இந்த விஷயத்தில் நான் கேப்டனை மட்டும் குறி வைத்துப் பேச மாட்டேன். நிச்சயமாக அவரைச் சுற்றியுள்ள நம்ப முடியாத தலைவர்கள் இடமிருந்து அவர் கருத்துகளை பெறுகிறார். இது களத்தில் நிகழ் நேரத்தில் அவர் எடுக்கும் முடிவுகளை வடிவமைக்க உதவுகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -